பிபிசி தமிழில் 6 மணி வரை இன்று

பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில் பலி

படத்தின் காப்புரிமை Reuters

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர்.

செய்தியை படிக்க: ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில் பலி

இராக்-இரான் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இராக்-இரான் நிலநடுக்கத்தின் பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

இராக்-இரான் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்தன. பெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவதை இதில் காணலாம்.

இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சத வீதத்தால் அதிகரித்துள்ளது.

செய்தியை படிக்க: இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு

குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, பள்ளிக்கூடத்திற்கு ஒருநாள் கூட ஆகாஷ் விடுப்பு எடுக்கவில்லை என்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பதிலும் தவறவில்லை என்றும் ஆனந்தன் கூறினார்.

செய்தியை படிக்க: குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

'குழந்தைகள் நலன் கருவிலிருந்தே துவங்க வேண்டும்'

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குழந்தைகள் நலன்: கருவிலிருந்தே துவங்க வேண்டும்

சமீபத்தில் வந்த பன்னாட்டு அமைப்பின் ஆய்வுகளின்படி, உலக அளவில் சத்தற்ற குழந்தைகள் வாழும் ஆப்பிரிக்க நாட்டைப் பின்தள்ளி, இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

செய்தியை படிக்க: 'குழந்தைகள் நலன் கருவிலிருந்தே துவங்க வேண்டும்'

நிலநடுக்கத்தை நீண்ட காலம் முன்பே கணிப்பது சாத்தியமா?

படத்தின் காப்புரிமை EPA

முறைப்படியான கல்வி இல்லாத சிலர் செய்த நில நடுக்க முன்கணிப்புகளால் இத்தாலி, ஆசிய கண்டம் மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் மக்கள் பதற்றமும் பரபரப்பும் அடைய நேர்ந்தது. உண்மையில் எப்போது நிலநடுக்கம் வரும் என்பதை சரியாகக் கணிக்க முடியுமா?

செய்தியை படிக்க: நிலநடுக்கத்தை நீண்ட காலம் முன்பே கணிப்பது சாத்தியமா?

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதா?

ராமஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கடலோரக் காவல்படை அதனை மறுக்கிறது.

செய்தியை படிக்க: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதா?

'திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

படத்தின் காப்புரிமை AFP

அக்டோபரில், டோக்கியோவின் புறநகர் பகுதிகளில் உள்ள "திகில் வீடு" என்று கூறப்படும் ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது சிதைந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

செய்தியை படிக்க: 'திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?

''இந்த குறும்படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று அந்த இயக்குநரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அதனால், இதனை ஒரு முன்மாதிரியாக கொண்டு இதைவிட கலாசார அதிர்ச்சிகள் சார்ந்த படங்கள் மேலும் வரக்கூடும்''.

செய்தியை படிக்க: 'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?

புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.

செய்தியை படிக்க: புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images

குஜராத் வித்யாபீடத்தின் சமூகவியல் துறை தலைவரான ஆனந்திபென் பட்டேல், பெண்கள் அரசியலில் நுழைவதற்கு இருக்கக்கூடிய தடைக்கற்களாக இத்தகைய சம்பவங்கள் உள்ளது என்று நம்புவதாகக் கூறினார்.

செய்தியை படிக்க: இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி

''மலையளவு துக்கம் வந்தாலும், நேரு குடும்பத்தினர் கண்ணீர் விடுவதில்லை"

படத்தின் காப்புரிமை Getty Images

நேருவின் கோபமே அவரது உயிருக்கு உலைவைக்கும் என்ற பயம் மவுண்ட்பேட்டனுக்கு எப்போதுமே இருந்தது. எனவே நேருவை கண்காணிப்பதற்காக அவர் சில வீரர்களை நியமித்திருந்தார்.

செய்தியை படிக்க: ''மலையளவு துக்கம் வந்தாலும், நேரு குடும்பத்தினர் கண்ணீர் விடுவதில்லை"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :