ஆஸ்திரேலியா: ஒரு பாலின திருமண சட்டம் நிறைவேறியது

தேசிய அளவில் பல மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விவாதங்களுக்கு பின்னர், ஒருபாலுறவுக்காரர்களின் திருமண சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மொத்தம் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 4 பேர் எதிராக வாக்களித்திருந்த இந்த மசோதாவை நாடாளுமன்ற கீழவை ஏற்றுக்கொண்டவுடன் மகிழ்ச்சியும், கைத்தட்டல்களும், கட்டி தழுவுதலும் நிகழ்ந்துள்ளன.

இதற்கு முன்னதாக, நாடாளுமன்ற மேலவை இந்த சட்டத்தை ஒருமனதாக ஏற்றிருக்கிறது.

ஒருபாலுறவுக்கரர்களின் திருமணத்திற்கு ஆதரவாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆதரவளிப்பதை தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் அறிய வந்த பின்னர் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption நாடாளுமன்றத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவின் கவனர் ஜெனரல் இந்த மசோதவில் கையழுத்திட்டவுடன் அதிகாரப்பூர்வ சட்டமாக இது மாறும்.

சனிக்கிழமை முதல் திருமணம் செய்வதற்கான நோட்டீஸை ஒருபாலுறவுக்கார ஜோடிகள் வழங்க முடியும்.

திருமண பந்தத்தில் இணைவதற்கு முன்னர் அவர்கள் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :