ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AFP

சௌதி அரேபியாவை தாக்க ஏமன் போராளிகளுக்கு இரான் ஏவுகணைகள் வழங்கியதாக ஐ.நாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷியாவை எச்சரித்த அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty

சிரியாவில் ஒப்புக்கொள்ளப்பட்ட முரண்பாடு அல்லாத பகுதிகளில் ரஷிய ஜெட் விமானங்கள் நுழைந்ததையடுத்து, அமெரிக்க போர் விமானங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெரு அதிபருக்கு நெருக்கடி

படத்தின் காப்புரிமை EPA

பிரேசிலை சேர்ந்த ஜாம்பவான் கட்டுமான நிறுவனமான ஓடிரெச்ச்ட்டில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி பதவி விலக வேண்டிய நெருக்கடி வலுத்து வருகிறது.

பிரான்ஸில் பள்ளி பேருந்து மோதி விபத்து : 4 குழந்தைகள் பலி

படத்தின் காப்புரிமை Image copyrightFRANCE BLEU ROUSSILLON/HANDOUT

தெற்கு பிரான்ஸில் உள்ள பெர்பிகான் பகுதி அருகே ரயில் மற்றும் ஒரு பள்ளி பேருந்து ஆகியவை மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் இறந்துவிட்டனர்.

விபத்தில் காயமடைந்த 20 பேரில் 11 பேர் மோசமான நிலையில் உள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்