அமெரிக்க தேர்தல் விவகாரம்: சிறப்பு ஆலோசகரை மாற்றும் எண்ணமில்லை என டிரம்ப் கருத்து

அதிபர் டிரம்ப் படத்தின் காப்புரிமை Chris Kleponis-Pool/Getty Images

கடந்த ஆண்டு நடந்த, அமெரிக்க தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்பதை கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் சிறப்பு ஆலோசகரான, ராபர்ட் முல்லரை பணிநீக்கம் செய்யும் எண்ணம் தமக்கு இல்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முல்லரின் விசாரணைக்குழுவுக்கும், வெள்ளை மாளிகைக்குமான மனகசப்பு அதிகரித்துள்ளது.

முல்லரின் குழுவால், ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக, டிரம்பின் குழுவில் உள்ள வழக்கறிஞர் சனிக்கிழமை கூறினார்.

சட்டரீதியான பிரச்சனைகள் குறித்து பதிலளித்த அதிபர் டிரம்ப், "இந்த நகர்வு சிறப்பானதாக இல்லை" என்றும், தன் குழுவினர் "மிகவும் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும்" கூறினார்.

"அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. காரணம் எங்கள் பிரச்சாரக்குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் எந்த கூட்டும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ராபர்ட் முல்லர்

டிரம்பின் நிர்வாகம், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதை மறுத்துள்ளது. இந்த விசாரணையை ஒரு `சூனிய வேட்டை` என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.

முல்லரை பணிநீக்கம் செய்யும் எண்ணம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, `இல்லை` என்று டிரம்ப் பதிலளித்தார்.

ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக, வெள்ளை மாளிகையின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் ஷிஃப், குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் இந்த விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முயல்வதாக, தான் அஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையில், டிரம்பின் பிரச்சாரக்குழுவில் இடம்பெற்றிருந்த பல முன்னாள் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :