பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

குஜராத் தேர்தல் முடிவுகள்: 'நோட்டா'-வுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளின் சதவீதம் மட்டும் 1.8%. இதன்மூலம் அதிக வாக்குகளை பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோட்டா பெற்றுள்ளது.

செய்தியை படிக்க:குஜராத்: தேர்தல் முடிவுகளை தீர்மானித்ததில் பெரும் பங்காற்றிய 'நோட்டா'

10 ரூபாய் நாணயம் படுத்தும்பாடு!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 ரூபாய் நாணயம் படுத்தும்பாடு!

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற குழப்ப நிலையிலேயே தாங்கள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அரசு பேருந்துகள், கடைகள் என பல இடங்களில் இந்த நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்றும், இதற்கான விளக்கத்தை அரசு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா

படத்தின் காப்புரிமை RRODRICKBEILER

சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நிரந்தர பிரதிநிதிகள் கொண்ட நாடுகளும், 10 நிரந்தரமற்ற பிரதிநிதிகள் கொண்ட நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

செய்தியை படிக்க:ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா

வாஷிங்டன் ரயில் விபத்து: அதிர்ச்சியூட்டும் வான்வழி காட்சிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வாஷிங்டன் ரயில் விபத்தின் வான்வழி காட்சிகள்

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஐ-5 நெடுஞ்சாலையிலிருந்த ஒரு பாலத்திருந்து பயணிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய இந்து கோடீஸ்வரர்

டாக்டர் ஷெட்டியின் கதை, சாமானியர் ஒருவர் அரசனான சுவராஸ்சியமான கதைக்கு நிகரானது. 1942ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்த அவர், 1973இல் கடன் பெற்ற பணத்துடன், வேலை தேடி துபாய்க்கு சென்றார்.

செய்தியை படிக்க: ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய 'இந்து' கோடீஸ்வரர்

குஜராத் வெற்றி: மோதிக்கு சொந்தமா, பாஜகவுக்கு சொந்தமா?

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத்தில் பா.ஜ.க 49 சதவிகித ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 சதவிகித ஓட்டுகளைப் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றிக்கு மத்தியிலும், பா.ஜ.க கவலைப்படுவதற்கான காரணங்கள் உள்ளன.

செய்தியை படிக்க: குஜராத் வெற்றி: மோதிக்கு சொந்தமா, பாஜகவுக்கு சொந்தமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :