ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

மன்னிப்பு கேட்டது ஆப்பிள் நிறுவனம்

படத்தின் காப்புரிமை Reuters

புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாக ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்காவில் எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள .

இத்தாலி நாடாளுமன்றம் கலைப்பு

படத்தின் காப்புரிமை EPA

அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா உத்தரவிட்டுள்ளார்.

லைபீரியாவின் அதிபரானார் ஜார்ஜ் வியா

படத்தின் காப்புரிமை AFP

லைபீரியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ஜார்ஜ் வியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் ஜோசஃப் பொகாய் போட்டியிடடிருந்தார்.

பன்றி இறைச்சிக்கு போராடும் வெனிசுலா

படத்தின் காப்புரிமை EPA

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புகழ்பெற்ற உணவான பன்றி இறைச்சி கிடைக்கவில்லை என வெனிசுலா நாட்டின் கர்கஸ் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பற்றாற்குறைக்கு காரணம் போர்துகல் சரியான நேரத்தில் பன்றி இறைச்சியை விநியோகிக்காததுதான் என வெனிசுலா நாட்டு அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :