ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இரான்: ஆர்ப்பாட்டத்தில் கலவரம்

படத்தின் காப்புரிமை EPA

இரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டாத்தில் கலவரம் வெடித்தது. மக்களின் வாழ்க்கைதரம் மிக மோசமடைந்துவருகிறது என்று சொல்லி கடந்த மூன்று நாட்களாக இரானிய நகரங்களில் போராடி வருகிறார்கள் மக்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வெடித்த கலவரத்தில் இருவர் இறந்துள்ளனர்.

டிரம்ப் - ரஷ்யா தொடர்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்யாவுக்கும் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரத்திற்கும் சந்தேகத்திற்குரிய தொடர்பு குறித்த விசாரணை, ஆஸ்திரேலியா பகிர்ந்து கொண்ட ரகசிய தகவலுக்கு பின்னரே தொடங்கியது என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கி விமானி

படத்தின் காப்புரிமை Getty Images

துருக்கி விமானி ஒருவருக்கு வழங்கி உள்ள புகலிடத்தை ரத்து செய்யுமாறு தங்கள் நாட்டு நீதித் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக கிரீஸ் அரசாங்கம் கூறியுள்ளது. துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்ற பின் எட்டு விமானிகள் கிரீஸிற்கு தப்பிச் சென்றனர். அவர்களுக்கு புகலிடம் அளித்தது தொடர்பாக துருக்கி தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.

எவரெஸ்ட் முயற்சி

படத்தின் காப்புரிமை AFP

எவரெஸ்ட் மலையை தனியாக ஏறுபவர்களை தடுக்க வழிவகுக்கும் புதிய ஒழுங்குவிதிகளை விதித்துள்ளது நேபாள அரசு. விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக நேபாளம் கூறியுள்ளது. கை கால்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள் உரிய மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எவரெஸ்டை ஏற முயற்சிக்க கூடாது என இந்த புதிய விதிமுறைகள் கூறுகின்றன.

பொய் தகவலால் நேர்ந்த துயரம்

படத்தின் காப்புரிமை WICHITA POLICE DEPARTMENT FACEBOOK

போலீஸுக்கு பொய தகவல் அளித்து ஒருவர் இறக்க காரணமாக இரந்தவரை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது. இருபத்து ஐந்து வயதான டைலர் பேரிஸ், காவல் துறையின் அவசர எண்ணுக்கு அழைத்து, கன்சாஸ் நகரத்தில் தன் சொந்த தந்தையை கொன்ற ஒருவர், தன் குடும்பத்தில் உள்ள பிறரை பணயகைதியாக வைத்திருப்பதாக தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் அந்த வீட்டை முற்றுகையிட்ட காவல் துறை ஒருவரை துப்பாக்கியால் சுட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார், பின், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் அப்பாவியென்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பொய் தகவல் அளித்த அந்த நபரை காவல்துறை கைது செய்தது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :