ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஆர்ப்பாட்டமும் கலவரமும்:

படத்தின் காப்புரிமை AFP

இரான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அனைத்து அனுமதியும் அதன் குடிமக்களுக்கு உள்ளது ஆனால் அதே நேரம் தேசத்தின் பாதுகாப்பை பாதிப்புக்கு உள்ளாக்க எந்த அனுமதியும் கிடையாது என்று இரான் அதிபர் ஹசன் ரோஹானி கூறி உள்ளார். கடந்த நான்கு நாட்களாக இரான் மக்கள் விலைவாசி உயர்வு ஏற்றத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து ரோஹானி இவ்வாறு கூறியுள்ளார்.

தூதர் திரும்ப அழைப்பு:

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக பாலஸ்தீன் அறிவித்துள்ளது. அண்மையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பாலஸ்தீன் அதிபர் மஹ்முத் அப்பாஸ் தாங்கள் அமெரிக்காவின் எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் உடன்படப்போவதில்லை என்றார். அமெரிக்கா ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தப்பின் காஸாவில் கலவரம் ஏற்பட்டது.

12 பேர் இறப்பு:

படத்தின் காப்புரிமை PUBLIC SECURITY MINISTRY

மேற்கு கோஸ்டா ரிக்காவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பத்து பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ஐந்து பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஊதிய உயர்வு:

படத்தின் காப்புரிமை EPA

வெனிசுலா அரசாங்கம் தமது ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 40 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரமும், பணவீக்கமும் மோசமான சூழலில் இருக்கும் நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மூலமாக அந்நாடு ஈட்டிய வருவாய் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு பொருளாதாரமும் வீழ்ச்சியை கண்டது.

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூடு:

படத்தின் காப்புரிமை AFP/Getty

காங்கோ ஜனநாயக குடியரசில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் ஏழு பேர் மரணமடைந்தனர் என்று ஐ,நா கூறியுள்ளது. காங்கோ நாட்டின் அதிபர் ஜோசஃப் கபிலா பதவி விலக வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :