ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இரானில் அரசு ஆதரவாளர்கள் பேரணி

இரானில் நிலவிவரும் அமைதியின்மைக்குப் பதிலடி தரும்விதமாக, ஆயிரக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் நான்காம் நாளாகப் பேரணியில் ஈடுபட்டனர்.

கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயார்

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அடுத்த வாரம் நடக்க உள்ள பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்க வழிவகுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செனகலில் 13 பேர் பலி

தெற்கு செனகலில் நடந்த துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

செளதி இளவரசர்கள் கைது

படத்தின் காப்புரிமை AFP

செளதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை செலித்திவந்ததை நிறுத்த செளதி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :