கடந்த ஓராண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சொன்னதும், செய்ததும்: 8 தகவல்கள்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னின் பிறந்தநாளான இன்று அவர் கடந்த ஓராண்டாக கூறியதையும், செய்ததையும் தொகுத்துள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

உப்பு மூட்டை உற்சாகம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏவுகணை எஞ்சின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது வட கொரியா. இதனை நேரில் பார்வையிட்ட அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் -உன் முதுகு மீது அந்நாட்டின் முக்கியமான அதிகாரி உப்பு மூட்டை ஏறினார். அதிபர் கிம் மகிழ்ச்சியானவர் மற்றும் இயல்பானவர் என்ற எண்ணத்தை பொது மக்களிடையே ஏற்படுத்துவது தான் இந்தப் புகைப்படத்தின் முக்கிய நோக்கமாக கருதப்பட்டது.

அணு ஆயுத லட்சியம்

படத்தின் காப்புரிமை Reuters

"வரம்பற்ற தடைகளை போட்டாலும், நாம் எப்படி அணு ஆயுத இலக்குகளை அடைகிறோம் என்பதை சக்தி படைத்த அதிகார வெறியர்களுக்கு காட்ட வேண்டும்" என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டப்பின் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது.

மனத் தளர்ச்சி

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவை அச்சுறுத்துவதன்மூலம் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு 'தற்கொலை முயற்சியில்' ஈடுபட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலாக "வயது மூப்பால் மனத் தளர்ச்சியுற்றுள்ள டிரம்ப், ஆயுதங்களின் மூலமாக வழிக்குக் கொண்டுவரப்படுவார்." என்று கூறினார் கிம்.

அமெரிக்காவை கட்டுப்படுத்தும் முயற்சி

படத்தின் காப்புரிமை KCNA

ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜோங் உன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசுகையில், பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின் தொடக்கம் மற்றும் குவாம் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முன்னோட்டம் இது என்றும் தெரிவித்தார்.

சகோதரிக்கு பொலிட்பீரோ பதவி

படத்தின் காப்புரிமை EPA

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக அக்டோபர் மாதம் நியமித்தார்.

அழகுசாதன தொழிற்சாலை

படத்தின் காப்புரிமை KCNA VIA AFP

பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன், கிம் ஜாங் உன் கடந்த அக்டோபர் மாதம் சென்றார். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டது. புகைப்படங்களுக்கு மத்தியில், அழகு சாதனங்களுக்கு இடையே நிற்கும் அவரின் புகைப்படம் வித்தியாசத்தை கண்பித்தது

அணு ஆயுத பொத்தான்

படத்தின் காப்புரிமை Getty Images

"அமெரிக்காவை தாக்கும் அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான், தனது மேஜையில் உள்ளது. இது மிரட்டல் இல்லை. இது உண்மைநிலை." என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தன் புத்தாண்டு உரையில் பேசி இருந்தார். அதே உரையில், "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்" என்று தென்கொரியாவுக்கு சமிக்ஞையும் அனுப்பி இருந்தார்.

ஒலிம்பிக் போட்டி

படத்தின் காப்புரிமை Reuters

தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக அந்நாட்டிற்கு தங்கள் நாட்டின் சார்பாக அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்தார்.

தொடர்புடையச் செய்திகள்

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :