ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்பின் உடல் நிலை

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பான உடல்நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப்பின், டிரம்ப் முதல் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதன் தொடர்சியாக இந்த தகவல் வெளியிடப்பட்டது.

அச்சம் தந்த தகவல்

படத்தின் காப்புரிமை Twitter

ஹவாய் பகுதியை ஏவுகணை தாக்கப்போகிறது என்று பரவிய பொய் தகவல், மக்களை பீதி அடைய செய்தது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்." என்ற பொருளில் அந்த செய்தி இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது பொய்யான தகவல் என்று உறுதியானது. மாகாண ஆளுநர், ஊழியர்கள் தவறான பொத்தானை அழுத்தியதால் இந்த அவசர செய்தி பரவியாதாக மன்னிப்பு கோரினார்.

ஊழியர்கள் கடத்தல்

படத்தின் காப்புரிமை AFP

கொலம்பியா எண்ணெய் நிறுவன ஊழியர்கள், அந்நாட்டின் இ.எல்.என் என்று அழைக்கப்படும் கிளர்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த ஐந்து தசாப்தங்களாக போராடிவரும் இ.எல்.என் கிளர்ச்சி படையுடன், கொலம்பியா அரசு பேச்சு வார்த்தை நடத்திவந்தது. இந்த பேச்சு வார்த்தையும், போர் நிறுத்தமும் அண்மையில் முறிந்ததை அடுத்து, இ.எல்.என் படைகள் எண்ணெய் நிறுவன ஊழியர்களை வெனிசுலா எல்லை அருகே கடத்தி உள்ளனர்.

ஆடை நிறுவனம் மீது தாக்குதல்

படத்தின் காப்புரிமை WIKUS DE WET/AFP/GETTY IMAGES

தென் ஆஃப்ரிக்கா ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் உள்ள ஹச் அண்ட் எம் நிறுவன ஆடை விற்பனை கூடத்தை தாக்கிய கிளர்ச்சியாளர்களை கலைக்க போலீஸ் ரப்பர் குண்டுகளை கொண்டு தாக்கினர். அண்மையில் எச் அண்ட் எம் நிறுவனம் ஒரு மேலாடைக்கான விளம்பரத்தை செய்திருந்தது. அந்த விளம்பரம் கறுப்பினத்தவர்களை சிறுமைப்படுத்துவதாக கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்த சூழ்நிலையில், அந்த நிறுவனத்துக்கு எதிராக பொருளாதார விடுதலை கட்சி என்னும் தீவிர போக்குடைய அமைப்பு ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது. அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அந்த நிறுவனத்தின் விற்பனை கூடம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :