தமிழகத்தில் இலவச திட்டங்கள் ஆரம்பம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 செப்டம்பர், 2011 - 13:28 ஜிஎம்டி
மாணவருக்கு இலவச மடிக்கணி வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மகளிருக்கு மிக்சி உள்ளிட்ட கருவிகள், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடுமாடுகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கும் திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது.

அஇஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் ஜெயல்லிதா சென்னையை அடுத்த திருவள்ளூரில் இத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

"மடிக்கணினி மாணவர்களை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும். மிக்சி க்ரைண்டர் மகளிரின் நேரத்தை சேமிக்க உதவும்."

ஜெயலலிதா

திமுகவின் நிறுவனர் அண்ணாவின் 103வது பிறந்த நாளில் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிட்த்தக்கது.

இவ்வாண்டு 9.12 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு லாப்டாப்கள், 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் கருவிகள், 12,000 குடும்பங்களுக்கு தலா ஒரு கறவை மாடு, மேலும் 1 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் என்ற ரீதியில் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவற்றிற்காக 2353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கறவை மாடும் வழங்கப்பட்டிருந்தது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அரசு அமல்படுத்தும்போது, அவற்றை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றனர் சிலர் என்றும் அவர் குறை கூறினார்.

மடிக்கணினி மாணவர்களை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லுமென்ற அவர், மிக்சி க்ரைண்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மகளிரின் நேரத்தை சேமிக்க உதவும், சேமிக்கப்பட்ட நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமாக செலவழிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அடையாளமாக ஒரு சிலருக்கு இன்றுக்கு கருவிகளையும், கால்நடை பெறுவதற்கான சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.

பயனாளிகள் அரசிற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

விமர்சனம்

மடிக்கணினிகளைப் பெறும் மாணவர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாலும், அதில் பயன்படுத்தப்படும் மென்பொருள் அவர்களுக்கு பெரிதாகப் பயனெதையும் கொடுத்துவிடாது என ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆரம்ப அளவிலான மென்பொருளே தரப்படுவதால், மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்புச் செல்லும்போது அதற்குத் தேவையான மென்பொருளை விலைக்கே வாங்கவேண்டியிருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவிரவும் இப்போது வழங்கப்பட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொடர்பான காப்புரிமை மென்பொருளைப் பயன்படுத்த ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆர்வலர்களின் கடுமையாக எதிர்ப்பின் விளைவாக இலவசமாகவே கணினியில் பயன்படுத்தக்கூடிய லினக்ஸ் மென்பொருளும் லாப்டாப்பில் இணைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

மாடுகளை வழங்க திட்டமிட்டுள்ள அரசாங்கம், மாடுகளுக்குத் தேவையான தீவனம், மேய்ச்சல் நிலம், ஆடுகள் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் இவற்றையெல்லாம் அரசில் கணக்கிலெடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை என்றும் வேறு சிலர் குறை கூறுகின்றனர்.

ஆயினும் முதல்வர் கூறுவதுபோல இலவசங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்படுவத்ற்கான் வாய்ப்புக்கள் அதிகம் என வேறு சிலர் வாதிடுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.