படங்களில்: சிர்த்தில் நடந்துவரும் யுத்தம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 செப்டம்பர், 2011 - 16:13 ஜிஎம்டி
  • லிபியாவில் கர்ணல் கடாஃபிக்கு விசுவாசமான படைகள் வலுவாகவுள்ள ஒரு சில இடங்களிலும் கடாஃபி எதிர்ப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடாஃபி பிறந்த ஊரான சிர்த்தும் அதில் ஒன்று.
  • சிர்த் நகரத்தின் தெற்கிலும் மேற்கிலும் தமது படைகள் அரண்களைத் தகர்த்து நுழைந்திருப்பதாகவும், நகர மையத்திலிருந்து தாம் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தேசிய இடைக்கால நிர்வாக சபை கூறுகிறது. ஆனாலும் பலமான எதிர்த்தாக்குதல்களைச் சந்தித்த பின்னர் இவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
  • கிளர்ச்சிப் படைகள் சிர்த்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டிருக்கும் நிலையில், தொலைக்காட்சியில் பேசிய கடாஃபியின் பேச்சாளர் மூஸா இப்ராஹிம், லிபியாவை விடுவிக்க ஆயிரக்கணக்கில் தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாகக் கூறினார்.
  • சிர்த்துக்குள் நுழைய முயன்றபோது, தமது போராளிகள் பலர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிப் படை கூறுகிறது. இப்படத்தில் காயமடைந்த கடாஃபி விசுவாசி ஒருவரை கிளர்ச்சிப் படையினர் சிகிச்சைக்கு கொண்டு செல்கின்றனர்.
  • மிஸ்ராதா என்ற ஊரைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைப் பிரிவும் சிர்த்தில் சண்டையிட்டு வருகின்றனர்.
  • ரொக்கெட் குண்டுகளை கடாஃபிக்கு விசுவாசமான படையினர் பயன்படுத்தியிருந்தனர்.
  • கிளர்ச்சிப் படையினரை கடாஃபி எலிகள் என்று வருணித்திருந்தார். ஆனால் அவர்கள் சிங்கத்தின் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என லிபியா சென்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் கூறியிருந்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.