'குடி குடியைக் கெடுக்கும்': ஸ்காட்லாந்தின் புதிய முயற்சி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 நவம்பர், 2011 - 16:59 ஜிஎம்டி
ஸ்காட்லாந்தில் 20இல் ஒரு மரணம் மதுப்பழக்கத்துடன் தொடர்புடையது

ஸ்காட்லாந்தில் 20இல் ஒரு மரணம் மதுப்பழக்கத்துடன் தொடர்புடையது

ஸ்காட்லாந்தில், மதுபாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடு பிரச்சனைகள் மற்றும் இந்தக் காரணங்களால் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பவர்கள்- இப்படியான விடயங்களுக்காக ஆண்டுக்கு ஐந்தரை பில்லியன் டொலர்கள் அதாவது 550 கோடி டொலர்களுக்கும் அதிகளவில் அரச பணத்தில் செலவிடப்படுவதாக அரசு கூறுகின்றது.

அங்கு 20 இல் ஒரு மரணம் மதுபாவனையுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் ஸ்கொட்லாந்து குடிப்பழக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

மதுபானத்தின் விலைக்கும் அதன் பாவனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதாக ஸ்காட்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நிக்கோலாஸ் ட்டேர்ஜன் கூறுகிறார்.

அங்கு ஒரு யுனிட் மதுபானத்தின் குறைந்தபட்ச விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் கடந்த முறை அமைச்சர்கள் இந்த சட்டத்தைக் கொண்டுவர முயன்ற போது, 45 பென்சுகள் அதாவது அமெரிக்க டொலரில் 70 சதம் வரை அதிகரித்தத் தீர்மானிக்கப்பட்டது.

அளவு கடந்த மதுபாவனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நீண்டகாலம் சுட்டிக்காட்டிவரும், இங்கு கடைகளில் கிடைக்கும் மலிவான விலைக்கு கூடுதல் குடிமயக்கத்தை பெறக்கூடிய, சைடர் போத்தல்களின் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தப்படவுள்ளன.

இந்த சட்டத்துக்கு எதிரான கருத்துடையவர்கள், உண்மையில் பிரச்சனைக்குரிய குடிகாரர்களில் இந்த புதிய மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்ப முடியாது என்று கூறுகிறார்கள்.

அளவாக பொறுப்போடு குடிப்பவர்களையும் பாதிக்கும் இந்த சட்டம், விலை நிர்ணயம் செய்வது என்பது நியாயமான வர்த்தகம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களை மீறும் நடவடிக்கையென்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தப் புதிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.