கைகால்களை இழந்தவர் கண்டங்கள் இடையே நீச்சல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மே, 2012 - 16:21 ஜிஎம்டி
  • ஃபிலீப் குரொய்ஸோன் தான் ஏற்றுக்கொண்ட சவாலின் முதல் கட்டமாக இந்தோனேஷியாவின் கிழக்கே அமைந்துள்ள பப்புவா மாகாணத்தின் பாசார் ஸ்கவ் தீவுக்கு நீந்தி வந்தார்.
  • ஆஸ்திரேலிய கண்டத்திலுள்ள பப்புவா நியூகினீயில் இருந்து ஆசிய கண்டத்திலுள்ள இந்தோனேஷியாவுக்கு இவர் நீந்தி வந்துள்ளார்.
  • 43 வயதாகும் குரொய்ஸோன் செயற்கை துடுப்புகளை கால்களில் பொருத்திக்கொண்டு இந்த 20 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஏழரை மணி நேரம் ஆனது.
  • 18 ஆண்டுகளுக்கு முன் மேற்கூரையில் ஏறி தொலைக்காட்சி ஆண்டெனா பொருத்திக்கொண்டிருக்கும்போது நடந்த ஒரு விபத்தில் இவர் தனது இரண்டு கைகளையும் கால்களையும் இழந்தார்.
  • நிலத்தில் சர்க்கர நாற்காலி துணையில்லாமல் நகர முடியாத அவர், நீரில் நெடுந்தூரம் நீந்தும் வல்லமை பெற்றுள்ளார்.
  • குரொய்ஸோனின் சாதனையைக் கண்டு சிலிர்த்த இந்தோனேஷிய மக்கள் அவரது சாதனையைக் கொண்டாடினர்.
  • பிரான்ஸிலுள்ள லா ரொஷெல் என்ற இடத்தில் குரொய்ஸோன் கடலில் நீந்திப் பழகி வந்துள்ளார்.
  • சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாயையும் குரொய்ஸோன் நீந்திக் கடந்திருந்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.