லண்டனில் செல்ஸீ மலர்க் கண்காட்சி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மே, 2012 - 13:57 ஜிஎம்டி
  • பிரிட்டனின் மிகப் பெரிய மலர்க் கண்காட்சிகளில் ஒன்றான செல்ஸீ மலர்க் கண்காட்சி செவ்வாயன்று ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் நடந்த வயலின் இசை விருந்து இது.
  • இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு திறப்பதற்கு முன்பாகவே மஹாராணி எலிசபெத்தும் அவரது கணவரும் இதனை வந்து பார்வையிட்டுள்ளனர்
  • 1913ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஐந்து நாட்களுக்கு இக்கண்காட்சி நடந்துவருகிறது. செல்ஸீ மருத்துவமனை திடலில் இது நடக்கிறது.
  • பிரிட்டனில் அண்மையில் பெய்த கடும் மழை கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு சிரமத்தை தந்தாலும், மலர்ச் செடிகளுக்கு நன்மை பயத்தன.
  • பிரிட்டனின் வாள் வீச்சு வீரர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டுகளித்தனர்.
  • தாய்லாந்து பாணியில் அமைக்கப்பட்ட மலர்ப் பூங்கா இக்கண்காட்சியின் சிறப்பம்சமாகும். இந்த கண்காட்சிக்கு ஒன்றரை லட்சம் பேர் முதல் சில நாட்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்ட வெட்ஸ்லாண்ட் மேஜிக்கல் கார்டன் பிரிவு இது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.