2 ஈக்களுக்கு மேல் கூடாது: பெய்ஜிங் பொதுக் கழிப்பறை விதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 மே, 2012 - 11:27 ஜிஎம்டி
பொதுப் கழிப்பறை பெயர்ப் பலகை

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் எந்த ஒரு பொதுக் கழிப்பறையிலும் எந்த ஒரு நேரத்திலும் இரண்டு ஈக்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மாநகர நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.

பெய்ஜிங் நகரின் பொதுக் கழிப்பறைகளில் சுத்தத்தின் தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் கொண்டுவந்துள்ள புதிய விதிகளின் அங்கமாக இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்யும் வழிமுறைகள், பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பயிற்சி ஆகியவற்றிலும் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங் நகரத்தின் பழைய வட்டகையில் வீடுகளில் கழிப்பறைகள் கிடையாது என்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தமது அன்றாடக் கடன்களுக்கு பொதுக் கழிப்பறைகளையே நம்பியுள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.