ஹூலா படுகொலைகள்: குற்றச்சாட்டை மறுக்கிறார் அஸ்ஸத்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 ஜூன், 2012 - 17:08 ஜிஎம்டி
ஹூலா நகரில் பலர் கத்தியால் குத்தப்பட்டும் அருகில் நின்று சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்

ஹூலா நகரில் பலர் கத்தியால் குத்தப்பட்டும் அருகிலிருந்து சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்

ஹூலா நகரில் நடந்த படுகொலைகளில் தனது அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை சிரியாவின் அதிபர் பஷர் அல்-அஸ்ஸத் மறுத்திருக்கிறார்.


கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவில் ஹூலா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் கத்தியால் குத்தப்பட்டும், மிக அருகிலிருந்து சுடப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.


அந்த வலியை தம்மால் உணரமுடியாவிட்டால், தாம் மனிதர்களாக இருக்க முடியாது என்று அஸ்ஸத் கூறியுள்ளார்.


சிரியாவில் உள்நாட்டுக் குழப்பங்கள் ஏதும் இல்லை என்றும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதால், வெளியில் இருந்து தங்கள் நாட்டின் மீது போர் நடத்தப்படுவதாகவும் அஸ்ஸத் தெரிவித்துள்ளார்.

ஹூலா நகரில் நடந்த படுகொலைகள் தொடர்பாக முதல் முறையாகக் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் அஸ்ஸத், அரக்கர்கள் கூட அத்தகைய தாக்குதலை நடத்த மாட்டார்கள் என்றும், அவ்வாறான தாக்குதல்களுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக, இந்த வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹூலா படுகொலைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தின. பல்வேறு நாடுகள், சிரியாவின் தூதர்களை தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.