சீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 ஜூன், 2012 - 10:18 ஜிஎம்டி
சீன விண்வெளி வீரர்கள்

சீன விண்வெளிப் பயணம் முடிந்தது

மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர்.

சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதித்தது. இந்த நடவடிக்கைதான் , விண்வெளி நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் திட்டங்களில் முதல் கட்டமாகும்.

இந்த விண்வெளி வீரர்கள் திரும்பி வந்த கலன், வட சீனாவில் மங்கோலிய உட்பகுதியில் புல்வெளியில் தரையிறங்கிய பின்னர் , இந்த குழுவினர், தங்களுக்குள் உரையாடிக்கொள்வதையும், வரவேற்கவந்த மக்களைப் பார்த்து கையசைப்பதையும் அரச தொலைக்காட்சி காட்டியது.

சீனப்பிரதமர் வென் ஷியாபோ, இந்த சாதனை, சீனாவின் சக்தியை அதிகரிக்கும், தேசிய உணர்வுக்கு உத்வேகம் தரும் என்று கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.