ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது சுகாதாரமா? - தய்வானில் விவாதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2012 - 13:01 ஜிஎம்டி
நிற்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை அறிவுறுத்தும் படம்

ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டப்பட்டச் சொல்லி உள்ளூர் நிர்வாகத்தினரை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.