குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார் மிட் ரோம்னி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2012 - 10:17 ஜிஎம்டி
மிட் ரோம்னி

குடியரசுக் கட்சி மாநாட்டில் மிட் ரோம்னி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தான் தெரிவாகியிருப்பதை ஏற்றுக்கொண்டு ஃபுளோரிடாவில் நடந்த கட்சி மாநாட்டில் உரையாற்றியுள்ள மிட் ரோம்னி, "அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தான் காப்பாற்றுவேன்" என்று கூறியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமா, தான் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவருகிறார் என்று ரோம்னி குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா எரிசக்தித்துறையில் தன்னிறைவு காண்பதற்கும், நாட்டின் வரவு செலவுக் கணக்கில் துண்டு விழும் தொகையைக் குறைப்பதற்கும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும் தான் வைத்துள்ள திட்டங்களை இவர் தனது உரையில் விளக்கினார்.

தனது மொர்மோன் மத நம்பிக்கை குறித்தும் இவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.