வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில் இயங்கும் நகரம் அமைக்க ஹொண்டியுராஸ் அனுமதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 செப்டம்பர், 2012 - 10:28 ஜிஎம்டி
வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில் நகரம் இயங்கும்

வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில் நகரம் இயங்கும்

ஹொண்டியுராஸ் தனது நிலப்பரப்பில் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நகரம் உருவாக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தனியான வரிச் சட்டம், தனியான நீதித்துறை சட்டம் போன்றவற்றுடன் வெளிநாட்டு முதலீட்டார்களால் இந்த நகரம் நிர்வகிக்கப்படுவதை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஹொண்டியுராஸ் அரசாங்கம் வெளிநாட்டு தொழிலதிபர்களுடன் செய்துகொண்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த ஏழ்மையான நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு சர்ச்சைக்குரிய பரீட்சார்த்தமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், ஹொண்டியுராஸ் முன்னேற்றப் பாதையில் செல்ல ஒரு புதிய உந்துதல் கிடைக்கும் என்றும் அந்நாட்டின் அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் தாங்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த நிலங்களை இழக்க நேரிடும் என அஞ்சி இந்நாட்டின் பூர்வீக சமூகங்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படும் புதிய நகரை எங்கு அமைப்பது என்ற விஷயத்தில் மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்திற்கான பணிகள் வரும் வாரங்களில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.