யேமன் அமெரிக்கத் தூதரக வளாகமும் தாக்கப்பட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 செப்டம்பர், 2012 - 10:46 ஜிஎம்டி
அமெரிக்காவில் வெளியான இஸ்லாத்துக்கு எதிரான படத்துக்கு எதிராக அரபு உலகில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன

அமெரிக்காவில் வெளியான இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு எதிராக அரபு உலகில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன

அமெரிக்காவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படமொன்று வெளியானதால் ஆத்திரமடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யேமன் தலைநகர் சனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் முற்றுகையிட்டு கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுக்குள் வைத்திருக்க காவல்துறையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியும், அவர்கள் தூதரக வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருக்கும் வாகனங்களுக்கு தீயிட்டுள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை, லிபியாவில் பெங்காஸி நகரிலுள்ள தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மீண்டும் யேமனிலும் அமெரிக்கத் தூதரக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ள நிலையில், அவர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களை தூதரக வளாகத்தில் இருந்து காவல்துறையினர் விரட்டிவிட்ட போதிலும், வெளிப்புறத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடந்துவருகின்றது.

எகிப்து தலைநகர் காய்ரோவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நேற்று புதன்கிழமை,காய்ரோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சுவர்களை சேதப்படுத்தி அமெரிக்க கொடியையும் கிழித்தெறிந்துள்ளனர்.

இன்று அதிகாலையும் காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.