தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியாரின் அத்துமீறல் 'அருவருக்கத்தக்கது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2012 - 10:30 ஜிஎம்டி
வில்லியம் கேட் தம்பதியர் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தபோது படங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

'அரச குடும்பத்தினரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயங்களில் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக தயைிடுகின்றன'

பிரெஞ்சு சஞ்சிகையொன்று, பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமின் மனைவி கேம்பிரிட்ஜ் கோமகள் கேட் மிடில்டனை மேலாடை இல்லாத படங்களுடன் காண்பித்துள்ளமை தொடர்பில் தம்பதியர் இருவரும் கடும் கோபமடைந்துள்ளதாக அரச குடும்ப அதிகாரிகள் கூறுகின்றனர்.

தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயங்களில் இவ்வாறு அத்துமீறி நுழைவது என்பது அருவருக்கத் தக்கது என்றும் அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸில் உள்ள வழக்குரைஞர்களின் ஆலோசனையை வில்லியம் தம்பதியர் நாடியுள்ளனர்.

வில்லியமும் அவரது மனைவியும் பிரான்ஸிலுள்ள மாளிகையொன்றில் தமது விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தபோது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வில்லியமின் தாயாரான இளவரசி டயானாவின் வாழ்க்கையில் ஊடகங்கள் மோசமாக அத்துமீறி நுழைந்து ஏற்படுத்திய பாதிப்புகளை இந்தப் படங்கள் மீண்டும் நினைவுகூர்வதாக அரசகுடும்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரான்ஸில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மோசமான கார் விபத்தில் இளவரசி டயானா கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.