வங்கதேசத்தில் பெளத்த கிராமங்கள் மீது தாக்குதல்; விகாரைகள் தீக்கிரை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2012 - 10:36 ஜிஎம்டி
வங்கதேசத்தில் தீக்கிரையான பௌத்த விகாரையொன்று

வங்கதேசத்தில் தீக்கிரையான பௌத்த விகாரையொன்று

வங்கதேசத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் பௌத்தர்கள் செறிந்துவாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்குத் தீவைத்துள்ளார்கள்.

கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.

உள்ளூரில் பௌத்தர் ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

இதேவேளை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் விதத்தில் குறித்த படம் தனது பெயருக்கு tag செய்யப்பட்டிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்துக்கு உள்ளான அந்த நபர் கூறியிருக்கிறார்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட ராமு உபாசிலா பிரதேசத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.