அமெரிக்க அதிபர் தேர்தல் - போர்க்கள மாநிலங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 அக்டோபர், 2012 - 15:23 ஜிஎம்டி

பெரும்பான்மையான அமெரிக்க மாநிலங்கள் வரலாற்று ரீதியாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளன. எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தம் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங்கள் இம்முறையும் தமக்கே வாக்களிக்கும் என்று நம்புவார்கள். எனவே தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதை எஞ்சியிருக்கும் ஒரு சில மாநிலங்களே முடிவு செய்கின்றன. இந்த மாநிலங்கள், தேர்தல் 'போர்க்கள மாநிலங்கள்' என்று வர்ணிக்கப்படுகின்றன.

அதிபர் தேர்தல்கள், தேர்ந்தெடுப்போர் அவை ஒன்றைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அதன் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்குகள் தரப்படுகிறது. எனவே, சில மாநிலங்களின் வாக்குகள் மற்ற மாநிலங்களின் வாக்குகளை விட அதிக மதிப்புள்ளவையாகின்றன.

உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்துக்கு ( மக்கள் தொகை 37.7 மிலியன்) 55 வாக்குகள் உண்டு. ஆனால் இன்னும் சற்று கிராமப்புற மாநிலமான மோண்டானாவில் ( மக்கள் தொகை பத்து லட்சம் மட்டுமே) மூன்று வாக்குகளே அளிக்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் ஒரு அதிபர் பதவி வேட்பாளர், அந்த மாநிலத் தேர்ந்தெடுப்போர் அவை வாக்குகள் அனைத்தையும் அள்ளிவிடுகிறார்.

அதிபர் தேர்தலில் வெல்ல ஒரு வேட்பாளர் 270 வாக்குகள் பெற வேண்டும்.

கட்சிகளின் கோட்டைகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்

போர்க்கள மாநிலங்கள் ( 161 வாக்குகள்)- போட்டி கடுமையாக இருக்கும் இம்மாநிலங்களில், இரு கட்சி வேட்பாளர்களில் எவரும் வெல்லலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்த மாநிலங்களில்தான், கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடும்.

குடியரசுக் கட்சியின் கோட்டைகள் ( 191 வாக்குகள்)- இந்த "சிவப்பு நிற மாநிலங்கள்" தென் மற்றும் மத்திய மேற்கு அமரிக்க மாநிலங்கள். இங்கே குடியரசுக் கட்சியின் ஆளுமை அதிகம். ஆனால் இந்த மாநிலங்களில் பல கிராமப்புற மாநிலங்கள் ; அங்கே சொற்ப தேர்தல் அவை வாக்குகளே உள்ளன.

ஜனநாயகக் கட்சியின் கோட்டைகள் ( 186 வாக்குகள்) - இந்தெ நீல நிற மாநிலங்கள் வட கிழக்கிலும், மேற்குப் புறத்திலும் அமைந்திருப்பவை. இவை சற்று பலமான நகர்ப்புற மாநிலங்கள். பெரிய மக்கள் தொகை. எனவே இங்கிருந்து தேர்ந்தெடுப்போர் அவைக்கு அதிக வாக்குகள் உண்டு.

பொறுத்திருங்கள்

கொலரடோ, 9 வாக்குகள்

சராசரியாகப் பார்த்தால், கொலராடோ, கடல் மட்டத்துக்கு மிக அதிக உயரத்தில் இருக்கும் மாநிலம். இதில் 1000க்கும் மேற்பட்ட, 10,000 அடிக்கும் மேல் உயரமான, மலைச்சிகரங்கள் இருக்கின்றன.

ஹிஸ்பானிய மக்கள் தொகை அதிகரித்து வரும் மற்ற மேற்கு அமெரிக்க மாநிலங்களைப் போலவே, கொலராடோவும் சமீப ஆண்டுகளாகவே, ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக நகரும் போக்கு காணப்பட்டுவருகிறது. இந்த மாநிலம் முன்பு குடியரசுக் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டுவந்தது. குடியரசுக் கட்சி மூன்று அதிபர் தேர்தல்களில் இந்த மாநிலத்தை வென்ற பின்னர், 2008ல் பராக் ஒபாமா, இந்த மாநிலத்தை ஜனநாயக் கட்சிக்காக வென்றார்.

ஆனல் இந்த மாநிலம் ஜனநாயகக் கட்சியினருக்கு பாதுகாப்பான ஒரு மாநிலம் என்று கருதி விட முடியாது; ஏனென்றால், இந்த 2010ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சியினர், இந்த மாநிலத்தில் இருந்து இரண்டு நாடாளுமன்ற இடங்களை வென்றனர். அந்த ஆண்டு நடந்த தேர்தலில், இந்த மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மேலவை (செனட்) இடத்தையும், மாநில ஆளுநர் பதவியையும், குடியரசுக் கட்சியினர் வெல்ல முடியாமல் போனதற்கு, மூன்றாவது அணி வேட்பாளர்கள் பலமாகப் போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததே காரணமாகக் கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் டென்வர் மற்றும் போல்டர் நகரங்களில் அதிகமாக இருக்கிறார்கள். குடியரசுக் கட்சி வாக்காளர்கள் கொலராடொ ஸ்ப்ரிங்ஸ் பகுதி போன்ற மத மற்றும் சமூக பழமைவாதம் ஆதிக்கம் செலுத்தும் கிராமப்புறப் பகுதிகளில் அதிகம் இருக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் டென்வர் நகரின் புறநகர்ப் பகுதிகள்தான், முக்கிய போட்டி நடக்கும் களங்களாக இருக்கின்றன.

மக்கள் தொகைப் பரவல்

 • 70.0%வெள்ளையர்
 • 3.8%கறுப்பர்
 • 20.7%ஸ்பானியர்
 • 5.4%மற்றவர்

பொருளாதாரம்

 • $56,344 சராசரி வருடாந்திர வருமானம்
 • 11.2% வறுமை விகிதம்
 • 8.20% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 8.4%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 4.7%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 8.9%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி
previous next
ஒரு மாநிலத்தில் கிளிக் செய்கவிவரங்களை அறிய

கடும் மோதல் நடக்கும் களங்கள்

இந்த மாநிலங்களில் போட்டி மிகக் கடுமையாக இருப்பதால், எந்தக் கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரும் வெல்லலாம் என்ற நிலைமை இருக்கிறது.இந்த மாநிலங்கள்தான் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும்

பின் செல்ல

கொலரடோ, 9 வாக்குகள்

சராசரியாகப் பார்த்தால், கொலராடோ, கடல் மட்டத்துக்கு மிக அதிக உயரத்தில் இருக்கும் மாநிலம். இதில் 1000க்கும் மேற்பட்ட, 10,000 அடிக்கும் மேல் உயரமான, மலைச்சிகரங்கள் இருக்கின்றன.

ஹிஸ்பானிய மக்கள் தொகை அதிகரித்து வரும் மற்ற மேற்கு அமெரிக்க மாநிலங்களைப் போலவே, கொலராடோவும் சமீப ஆண்டுகளாகவே, ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக நகரும் போக்கு காணப்பட்டுவருகிறது. இந்த மாநிலம் முன்பு குடியரசுக் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டுவந்தது. குடியரசுக் கட்சி மூன்று அதிபர் தேர்தல்களில் இந்த மாநிலத்தை வென்ற பின்னர், 2008ல் பராக் ஒபாமா, இந்த மாநிலத்தை ஜனநாயக் கட்சிக்காக வென்றார்.

ஆனல் இந்த மாநிலம் ஜனநாயகக் கட்சியினருக்கு பாதுகாப்பான ஒரு மாநிலம் என்று கருதி விட முடியாது; ஏனென்றால், இந்த 2010ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சியினர், இந்த மாநிலத்தில் இருந்து இரண்டு நாடாளுமன்ற இடங்களை வென்றனர். அந்த ஆண்டு நடந்த தேர்தலில், இந்த மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மேலவை (செனட்) இடத்தையும், மாநில ஆளுநர் பதவியையும், குடியரசுக் கட்சியினர் வெல்ல முடியாமல் போனதற்கு, மூன்றாவது அணி வேட்பாளர்கள் பலமாகப் போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததே காரணமாகக் கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் டென்வர் மற்றும் போல்டர் நகரங்களில் அதிகமாக இருக்கிறார்கள். குடியரசுக் கட்சி வாக்காளர்கள் கொலராடொ ஸ்ப்ரிங்ஸ் பகுதி போன்ற மத மற்றும் சமூக பழமைவாதம் ஆதிக்கம் செலுத்தும் கிராமப்புறப் பகுதிகளில் அதிகம் இருக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் டென்வர் நகரின் புறநகர்ப் பகுதிகள்தான், முக்கிய போட்டி நடக்கும் களங்களாக இருக்கின்றன.

மக்கள் தொகைப் பரவல்

 • 70.0%வெள்ளையர்
 • 3.8%கறுப்பர்
 • 20.7%ஸ்பானியர்
 • 5.4%மற்றவர்

பொருளாதாரம்

 • $56,344 சராசரி வருடாந்திர வருமானம்
 • 11.2% வறுமை விகிதம்
 • 8.20% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 8.4%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 4.7%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 8.9%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

புளோரிடா, 29 வாக்குகள்

சூரிய வெளிச்ச மாநிலம் என்று அழைக்கப்படும் புளோரிடா கடற்கரைகளுக்குப் பெயர்போனது. டிஸ்னி வோர்ல்ட் போன்ற சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விஷயங்களும் இம்மாநிலத்தில்தான்.

மாறி மாறி வாக்களிக்கும் மாநிலமான புளோரிடா, 1996லிருந்து ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும், வெல்லும் வேட்பாளருக்கே வாக்களித்து வந்திருக்கிறது. 2000ம் ஆண்டு தேர்தலில், ஜார்ஜ்.W.புஷ்ஷுக்கும் , அல் கோருக்கும் இடையே நடந்த போட்டியில், புளோரிடாவில் முடிவு மிகவும் நெருக்கமாக இருந்தது. மறு வாக்கெண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில், அதற்கு முற்றுப்புள்ளிவைக்க உத்தரவிட்டதன் பின்னர்தான் இந்த போட்டி முடிந்தது.

புளோரிடா பல்லின மக்கள் ஒன்றாக வசிக்கும் ஒரு மாநிலம். வடக்கே வெள்ளையின ப்ராட்டன்ஸ்டண்ட் கிறித்தவர்கள் , தெற்கே கியூபன் அமெரிக்கர்கள் குடியரசுக் கட்சி பக்கம் சாய்கிறார்கள். மையாமி மற்றும் தம்பா பகுதிகளில் வசிக்கும் நகரவாசிகளும், பாம் பீச் பகுதியில் வசிக்கும் யூத முதியவர்களும், க்யூபா அல்லதா பிற ஸ்பானியர்களும் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவர்கள். ஹிஸ்பானிய வாக்காளர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு குடிவரவு ஒரு முக்கிய விஷயம் என்றாலும், பொருளாதாரம் பெரும்பாலான வாக்காளர்களுக்கு இன்னும் முக்கியமான விஷயமாகவே இருக்கிறது. இந்த மாநிலம் வீட்டுக் கடன் சந்தை வீழ்ந்ததில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகைப் பரவல்

 • 57.9%வெள்ளையர்
 • 15.2%கறுப்பர்
 • 22.5%ஸ்பானியர்
 • 4.3%மற்றவர்

பொருளாதாரம்

 • $47,051 சராசரி வருடாந்திர வருமானம்
 • 13.1% வறுமை விகிதம்
 • 8.8% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 0.0%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 5.0%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 2.8%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

ஐயோவா , 6 வாக்குகள்

அமெரிக்க பூர்விக இந்தியப் பழங்குடியினர்களான, ஐயோவே மக்களின் பெயரால் ஐயோவா என்று இந்த மாநிலத்திற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. இந்த மக்களின் தலைவர் , சீப் ப்ளாக் ஹாக் நினைவாக, இந்த மாநிலத்தை ஹாக் ஐ மாநிலம் என்றும் அழைப்பார்கள்.

ஒவ்வொரு அதிபர் தேர்தலின் போதும் முதல் மாநிலக் காகஸ் என்று அழைக்கப்படும் வேட்பாளர் தெரிவுக்கூட்டத்தை நடத்துவதில் பிரபலமான மாநிலம் ஐயோவா. 2000 மற்றும் 2004 தேர்தல்களில், ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே சொற்ப வாக்குகளில் ஊசலடியது .ஆனால், 2008ல் பராக் ஒபாமாவுக்கு சற்று மேலும் பலமான பெரும்பான்மையைத் தந்தது.

இந்த மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் திறந்த வெளி விவசாய நிலங்களில், ஐயோவா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சோளம் விளைகிறது. இந்தப்பகுதி பொதுவாக குடியரசுக் கட்சி ஆதரவுப் பகுதி. மாநிலத்ஹ்டின் மத்தியில் இருக்கும் நகரங்களும், கிழக்குப் பகுதியில் இருக்கும், மாநிலத் தலைநகர் டேஸ் முவான்ஸ் மற்றும் கல்லூரி நகரான ஐயோவா நகரம் போன்றா பிற நகரங்கள் ஜனநாயக்கட்சிக்கு சாதகமான பகுதிகளாகும். விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் ஐயோவா மாநிலத்தில் பன்றி விவசாயிகள் பலர் உள்ளனர். சோள விவசாயிகளும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர். எனவே விவசாய மானியங்கள் என்பது இந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாக அனுகூலத்தைத் தரும் விஷயம்.

மக்கள் தொகைப் பரவல்

 • 88.7%வெள்ளையர்
 • 2.9%கறுப்பர்
 • 5.0%ஸ்பானியர்
 • 3.5%மற்றவர்

பொருளாதாரம்

 • $48,457 சராசரி வருடாந்திர வருமானம்
 • 12.4% வறுமை விகிதம்
 • 5.4% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 0.3%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 0.7%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 9.5%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

மிச்சிகன், 16 வாக்குகள்

பெரிய ஏரி மாநிலம் என்று அழைக்கப்படும் மிச்சிகன் அமெரிக்க கார் தொழிலின் தாயகம். இம்மாநிலத்தலைநகர் டெட்ராய்ட்டில்தான், கார் தொழிற்சாலைகள் மிகுந்திருக்கின்றன.

1992ஆம் ஆண்டிலிருந்து அனைத்து அதிபர் தேர்தல்களிலுமே மிச்சிகன் மாகாணம் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற இடமாக இருந்துவந்துள்ளது என்றாலும், 2000 மற்றும் 2004 தேர்தல்களில் இம்மாகாணத்தில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே ஜார்ஜ் புஷ் தோற்றிருந்தார். மாகாண தேர்தல்களைப் பொறுத்தவரையில் இங்கு குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றதுண்டு.

மிச்சிகன் மாகாணம் ஒரு காலத்தில் நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி மையமாக இருந்தது என்றாலும் தற்போது அங்கு கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது, காரணம் 1980கள் முதல் இப்பகுதியில் கனரக தொழிற்சாலைகள் சரிவைக் கண்டு வந்துள்ளன. மிச்சிகனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தேர்தல் விவகாரம் என்பது பொருளாதார சூழல்தான். அதிலும் குறிப்பாக நாட்டின் மூன்று முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களில் இரண்டு 2009ல் திவாலாகும் நிலையில் இருந்தபோது அவற்றுக்கு அரசாங்கம் கடனுதவி வழங்குவது என அதிபர் ஒபாமா எடுத்த முடிவு பெரிய தேர்தல் விவகாரமாக இருக்கும். ஒபாமாவின் முடிவை அரசு தலையீடு எனக்கூறி குடியரசுக் கட்சியினர் பலர் எதிர்க்கின்றனர். இந்த கடனுதவிதான் அந்நிறுவனங்களை மூடப்படுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்களை வேலையிழப்பிலிருந்தும் காப்பாற்றியதாக ஜனநாயகக் கட்சி கூறுகிறது.

மக்கள் தொகைப் பரவல்

 • 76.6%வெள்ளையர்
 • 14.0%கறுப்பர்
 • 4.4%ஸ்பானியர்
 • 4.9%மற்றவர்

பொருளாதாரம்

 • $47,461 சராசரி வருடாந்திர வருமானம்
 • 14.1% வறுமை விகிதம்
 • 9.4% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 5.1%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 3.4%
  2004 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 16.5%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

மின்னஸோட்டா, 10 வாக்குகள்

வடக்கின் விடிவெள்ளியாக விளங்க வேண்டும் என்பதுதான் மின்னெஸோட்டா மாகாணத்தின் லட்சியம். ஸ்கேண்டினேவிய அமெரிக்க கலாச்சார மையமாக இந்த இடம் விளங்குகிறது. ஸ்வீடன் மற்றும் நோர்வே போன்ற இடங்களில் இருந்து குடியேறியவர்களின் வலுவான பாரம்பரியம் கொண்ட இடம் இது.

1972 முதல் தொடர்ந்து மின்னெஸோட்டா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளனர். 1984 தேர்தலில் அமெரிக்காவின் மற்ற மாகாணங்கள் அனைத்தும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரீகனுக்கு வாக்களித்தபோதும்கூட மின்னெஸோட்டா ஜனநாயகக் கட்சிக்குத்தான் வாக்களித்தது. ஆனால் 2000 மற்றும் 2004 தேர்தல்களில் இங்கு ஜார்ஜ் புஷ் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார். மாகாணத் தேர்தல்களைப் எடுத்துக்கொண்டாலும் குடியரசுக் கட்சி சிறப்பாக பரிமளித்துவந்துள்ளது. 2006ல் இக்கட்சிக்காரர்தான் ஆளுநரரானார். 2010 தேர்தலில் மாகாண ஆளுநர் தேர்தலில் வெறும் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் இக்கட்சி வெற்றியை வழுவவிட்டிருந்தது.

நாட்டின் பிற இடங்களைப் போலவே மின்னெஸோட்டாவிலும் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்தான் முக்கிய அரசியல் விவகாரங்களாக உள்ளன. அதிலும் குறிப்பாக தொழிற்சாலை நகரங்களான மின்னியாபோலிஸ், செயிண்ட் பால், டுலுத் போன்ற இடங்களில் இவையே முக்கிய தேர்தல் விவகாரமாக இருக்கும். ஆனாலும் மின்னெஸோட்டா அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து ஒரு வித்தியாசமான அரசியல் பாதையில் பயணித்துள்ளது என்று சொல்லலாம். இம்மாகாணத்தில் மூன்றாம் தரப்பு வேட்பாளர்களுக்கு வழமையாகவே அதிக ஆடரவு இருந்துவந்துள்ளது.

மக்கள் தொகைப் பரவல்

 • 83.1%வெள்ளையர்
 • 5.1%கறுப்பர்
 • 4.7%ஸ்பானியர்
 • 6.9%மற்றவர்

பொருளாதாரம்

 • $56,704 சராசரி வருடாந்திர வருமானம்
 • 10.6% வறுமை விகிதம்
 • 5.9% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 2.4%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 3.5%
  2004 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 10.2%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

நெவாடா, 6 வாக்குகள்

பெரும் வெள்ளிச் சுரங்கத் தொழிற்சாலைகள் இருப்பதால் வெள்ளி மாகாணம் என்று அழைக்கப்படுகின்ற நெவாடாவில்தான், உலகப் பிரசித்தி பெற்ற நகரமான லாஸ்வேகாஸ் அமைந்துள்ளது.

1980 முதல் அதிபர் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளருக்கே அதிகம் வாக்குகளை அளித்த மாகாணமாக நெவாடா இருந்துவந்துள்ளது. இங்கே 2008ல் அதிபர் ஒபாமா கணிசமான வாக்குகள் விட்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்படியான தனது வெற்றியை 2012ல் மீண்டும் செய்து காட்ட முடியும் என ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நம்புகின்றனர். இந்த மாகாணத்தில் அதிகமாகவும் மேலும் அதிகரித்துவரும் எண்ணிக்கையிலும் தென்னமெரிக்க பூர்வீகம் கொண்டவர்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆகவே இங்குள்ளவர்கள் பலருக்கு குடிவரவு என்பது முக்கியமான ஒரு தேர்தல் விவகாரமாக உள்ளது.

2008ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு இடம் இந்த நெவாடா. இங்கே 2010ல் வேலையில்லாத் திண்டாட்டம் 15%மாக அதிகத்தது. ஆகவே பொருளாதாரத்தின் நிலைமை என்பது தேர்தலில் முக்கிய விவகாரமாக விளங்கும். லாஸ் வேகாஸ், ரெனொ போன்ற நகரப் பகுதிகளில் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவு அதிகம். அதுவே வேகாஸின் புறகர்ப் பகுதிகளிலும் பிராணிகள் வளர்ப்புப் பண்ணைகளும் இராணுவ தளங்களும் ஆங்காங்கே காணப்படும் மாகாணத்தின் பிற பகுதிகளிலும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

மக்கள் தொகைப் பரவல்

 • 54.1%வெள்ளையர்
 • 7.7%கறுப்பர்
 • 26.5%ஸ்பானியர்
 • 11.5%மற்றவர்

பொருளாதாரம்

 • $55,322 சராசரி வருடாந்திர வருமானம்
 • 9.4% வறுமை விகிதம்
 • 12.1% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 3.5%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 2.6%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 12.5%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

நியூ ஹாம்ப்ஷைர், 4

பல கிரானைட் குவாரிகளைக் கொண்ட இந்த மாநிலம் கிரனைட் மாநிலம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் மிகப்பிரபலமான, கிழட்டு மனித உருவத்திலமைந்த மலைப்பாறை வடிவமைப்பு, 200ம் ஆண்டு விழுந்து நொறுங்கிவிட்ட போதும், இன்னும் மாநிலத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.

ஒரு தாராளவாத மனப்பான்மை கொண்ட மாநிலமாக இருந்தாலும் ,நியு ஹாம்ப்ஷையர் மாநிலம், பல ஆண்டுகளாகவே , குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகவே, ஆச்சர்யப்படத்தக்கவகையில், வாக்களித்திருக்கிறது.

நாட்டின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முதல் பிரைமரியை நடத்தும் தேர்தலை நடத்தும் மாநிலம் என்ற பெருமைக்குரிய இந்த மாநில வாக்காளர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை , நேரடியாக உள்ளூர் நிகழ்ச்சிகளின் மூலம் 'அளந்து' பார்ப்பதை விரும்புகிறார்கள். இந்த மாநிலத்துக்கென்று ஒரு சுயேச்சையான, அரசாங்கத்துக்கு எதிரான மனோநிலை உண்டு ; இந்த மாநிலத்தில் பாரம்பர்யமாக இருக்கும் குறைந்த அளவிலான வரி விகிதங்கள் ஏராளமான வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களை அங்கு ஈர்த்திருக்கின்றன.

மக்கள் தொகைப் பரவல்

 • 92.3%வெள்ளையர்
 • 1.0%கறுப்பர்
 • 2.8%ஸ்பானியர்
 • 3.7%மற்றவர்

பொருளாதாரம்

 • $62,629 சராசரி வருடாந்திர வருமானம்
 • 8.7% வறுமை விகிதம்
 • 5.7% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 1.3%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 1.4%
  2004 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 9.6%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

நியூ மெக்சிகோ, 5 வாக்குகள்

அமெரிக்கப் பூர்வகுடியின மக்கள் சூரியனுக்கு குறியீடாக வைத்திருக்கும் 'ஸியா' இம்மாநிலத்தின் கொடியில் இடம்பெறுகிறது. அமெரிக்காவிலேயே, இம்மாநிலத்தில்தான், அமெரிக்கப் பூர்வகுடியினர், இரண்டாவது மிக அதிக சதவீதத்தில் வசிக்கிறார்கள்.

2000 மற்றும் 2004 அமெரிக்க அதிபர் தேர்தல்களில், இம்மாநில முடிவுகள் மிகவும் நெருக்கமாக, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அமைந்திருந்தன. 2000 தேர்தலில், அல் கோர் இந்த மாநிலத்தை 366 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், 2004 தேர்தலில், அதிபர் புஷ், இந்த மாநிலத்தை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், 2008ல் பராக் ஒபாமாவோ, இந்த மாநிலத்தில் 15 சதவீதம் அதிகப் பெரும்பான்மை வாக்குகளில் வென்றார். ஆனால் குடியரசுக்கட்சியினர், இந்த மாநிலத்தின் ஆளுநர் பதவியை 2010ல் வென்றிருந்தாலும், 2012ல் இந்த மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகக் கட்சியினரே மீண்டும் வெல்வார்கள் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

இந்த மாநிலம் சற்று நகரமயமான வடக்கு பகுதிகளில் ஜனநாயகக் கட்சியினரும், டெக்ஸாஸ் மாநிலத்தை ஒட்டியுள்ள தென் கிழக்குப் பகுதியில் குடியரசுக்கட்சினரும் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் பூகோள ரீதியாக அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. நியூ மெக்சிகோவில் இருக்கும் பெரிய லத்தினோ சமூகம், 2008 தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு ஆதரவாகத் திரும்பியது. பராக் ஒபாமாவால் அவர் உறுதியளித்த குடியேற்றச் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியவில்லை என்றாலும், குடியேற்றப் பிரச்சினையில் , குடியரசுக் கட்சியினரின் நிலைப்பாடு என்பது , லத்தினோ மக்களின் பெரும்பான்மை நிலைப்பாட்டுக்கு எதிராகவே இருக்கிறது.

மக்கள் தொகைப் பரவல்

 • 40.5%வெள்ளையர்
 • 1.7%கறுப்பர்
 • 46.3%ஸ்பானியர்
 • 11.3%மற்றவர்

பொருளாதாரம்

 • $42,737 சராசரி வருடாந்திர வருமானம்
 • 16.2% வறுமை விகிதம்
 • 6.5% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 0.1%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 0.8%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 15.1%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

வட கரோலினா , 15 வாக்குகள்

வட கரோலினாதான் ரைட்ஸ் சகோதரர்களின் பிரசித்தி பெற்ற, எரிசக்தியால் இயக்கப்பட்ட முதல் விமானப் பறத்தல் , கிட்டி ஹாக்குக்கு அருகே 1903ல் நடந்தது.

பல ஆண்டுகளாக, வட கரோலினா குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கியது. ஆனால் 2008ல் இந்த மாநிலத்தில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான, பராக் ஒபாமா சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரது வெற்றிக்கு, இந்த மாநிலத்தில் கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்ட மக்கள் தொகைப் பரவலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.

வட கரோலினா அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களில் மிகவும் சுபிட்சமான, மிக வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்று. குறிப்பாக, இந்த மாநிலத்தின் 'ஆராய்ச்சி முக்கோணம்' என்று அழைக்கப்படும் வட கரோலினாவின் மையமான ராலெய் மற்றும் டர்ஹாம் போன்ற பகுதிகளுக்கு, கல்லூரிப் படிப்பு முடித்த தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வருகின்றனர். மாநிலத்தில் ஹிஸ்பானிய சமூகத்தினர் அதிகரிப்பது, ஏற்கனவே அங்கு இருக்கும் பெரிய அளவிலான கறுப்பின சமூகம் போன்றவையுடன் இது ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு பெரிய , அதிகரித்து வரும் அளவிலான ஆதரவை தந்திருக்கிறது.

மக்கள் தொகைப் பரவல்

 • 65.3%வெள்ளையர்
 • 21.2%கறுப்பர்
 • 8.4%ஸ்பானியர்
 • 5.0%மற்றவர்

பொருளாதாரம்

 • $45,131 சராசரி வருடாந்திர வருமானம்
 • 15.1% வறுமை விகிதம்
 • 9.7% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 12.8%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 12.4%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 0.3%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

ஒஹையோ, 18

ஏழு் முன்னாள் அதிபர்களின் சொந்த மாநிலம் ஒஹையோ. சில சந்தர்ப்பங்களில் அதற்கு அதிபர்களை ஈந்து வரும் நவீன அன்னை என்று பெயருண்டு. ஆனால், இந்த மாநிலத்தின் மிகப்பிரபலமான புதல்வர், மின் விளக்கைக் கண்டுபிடித்த ,தாமஸ் எடிசன் தான்.

வெற்றிபெறக்கூடியவருக்கே வாக்களிக்கக்கூடிய ஒரு மாகாணம் இது. 1960 முதல் இம்மாகாணத்தில் வெற்றி பெற்றவர்தான் அதிபராக வந்துள்ளார். ஆகவே 2012 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவினால் கடந்த முறை தான் பெற்ற குறுகிய வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என அனைவரும் அவதானிப்பார்கள். குடியரசுக் கட்சியினரைப் பொறுத்தவரையில் 2010ல் இங்கு தாங்கள் பெற்ற ஆளுநர் தேர்தல் மற்றும் செனெட் உறுப்பினர் தேர்தல் வெற்றி இவ்வருடம் மேலும் ஒரு படி செல்ல முடியும் என நம்பிக்கொண்டுள்ளனர்.

அண்டையிலுள்ள மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா போல ஒரு காலத்தில் மிகப் பிரபலமான தொழிலுற்பத்தி மையமாக இருந்து பின்னர் சற்று பின்னடைவு கண்ட மாகாணம்தான் இந்த ஒஹியோவும். பிராக்டர் அண்ட் கேம்பிள், ஃபையர்ஸ்டோன் டயர்கள் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைமையகம் இன்னும் இதுதான். 2007க்கும் 2008க்கும் இடையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இம்மாநிலத்துக்கு கொஞ்சமும் இறக்கம் காட்டவில்லை. எனவே பொருளாதாரம்டான் நிச்சயம் வரும் தேர்தலில் வாக்காளர்களின் மனங்களின் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்கள் தொகைப் பரவல்

 • 81.1%வெள்ளையர்
 • 12.0%கறுப்பர்
 • 3.1%ஸ்பானியர்
 • 3.7%மற்றவர்

பொருளாதாரம்

 • $46,838 சராசரி வருடாந்திர வருமானம்
 • 14.5% வறுமை விகிதம்
 • 7.2% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 3.5%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 2.1%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 4.6%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

பென்சில்வேனியா, 20

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தான இடம் பென்சில்வேனியா மாகாணம் ஆகும். அந்நாட்டின் விடுதலை மணியும் இங்குதான் இருக்கிறது. இம்மாகாணம் கீஸ்டோன் மாகாணம் என்று அழைக்கப்படுகிறது.

1992 முதல் ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் இந்த மாகாணம் ஜனநாயகக் கட்சிக்கே அதிக ஆதரவு வழங்கியது என்றாலும், 2000 மற்றும் 2004 தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. 2010ல் நடந்த ஆளுநர் தேர்தலிலும் செனெட் தேர்தலிலும் இங்கு குடியரசுக் கட்சி வென்றுள்ள நிலையில், வரும் அதிபர் தேர்தலிலும் பென்சில்வேனியாவில் கடும் போட்டியை வழங்க முடியும் என குடியரசுக் கட்சியினர் நம்புகின்றனர்.

"ஃபிலடெல்ஃபியாவும் பிட்ஸ்பர்க்கும் இவற்றுக்கிடையில் அலபாமாவும்" என ஜனநாயகக் கட்சி அரசியல் ஆலோசகர் ஜேம்ஸ் கார்வீல் இம்மாகாணத்துக்கு கொடுத்த வர்ணனை மிகவும் பிரபலமானது. அம்மாகாணத்தின் அரசியல் ரீதியான வரை படமாகவும் அமைந்திருப்பது இந்த ஊர்கள்தான். இம்மாகாணத்தின் கிழக்கிலும் மேற்கிலும் அமைந்திருக்கின்ற தொழில் நகரங்களில் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் இடையில் உள்ள கிராமங்களில் குடியரசுக் கட்சியினர் சிறப்பாக பரிமளித்துவருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பென்சில்வேனியாவின் அனைத்து பகுதிகளையும் பாதித்துள்ளது. ஆகவே நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் நிதிநிலைமை முக்கிய விவகாரமாக இருக்கும்.

மக்கள் தொகைப் பரவல்

 • 79.5%வெள்ளையர்
 • 10.4%கறுப்பர்
 • 5.7%ஸ்பானியர்
 • 4.2%மற்றவர்

பொருளாதாரம்

 • $50,028 சராசரி வருடாந்திர வருமானம்
 • 13.2% வறுமை விகிதம்
 • 8.1% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 4.2%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 2.5%
  2004 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 10.3%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

வர்ஜீனியா, 13 வாக்குகள்

முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பல அமெரிக்க அதிபர்கள் இந்த மாநிலத்திலிருந்துதான் வந்தவர்கள் என்பதால், வர்ஜீனியா மாநிலம் 'அதிபர்களை ஈன்ற தாய் மாநிலம்' என்று அவ்வப்போது குறிப்பிடப்படுவதுண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபரான தாமஸ் ஜெபர்சன் கூட வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவரது பண்ணை அமைந்திருக்கும், மோண்டிசெல்லோ, தேசிய அளவில் முக்கியமான ஒரு இடமாக இருக்கிறது.

தென் மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களைப் போலவே, வர்ஜீனியாவும், அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து 1960கள் வரை ஜனநாயகக் கட்சியின் பின்னரே இருந்து வந்தது. ஆனால் 60களில், சிவில் உரிமைகள் சட்ட சீர்திருத்தங்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்ததை அடுத்து ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இந்த மாநிலமும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகியது.

ஆனனால், வாஷிங்டன் டி.சிக்கு வெளியேயுள்ள பசுமையான , வளமான புற நகர்ப் பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகைப் பெருக்கமும், ஹிஸ்பானிய குடிவரவு அதிகரித்திருப்பதும், ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஏற்றத்தைத் தந்துள்ளன. இந்த மாநிலத்தில் வரலாற்று ரீதியாகவே கறுப்பின மக்கள் அதிகம் இருந்திருப்பதையும் சேர்த்துக் கணக்கிட்டால், இந்த மாற்றங்கள் வர்ஜீனியாவை உண்மையிலேயே, தேர்தல் முடிவை மாறி மாறி நிர்ணயிக்கும் மாநிலமாக்குகின்றன. பராக் ஒபாமா இந்த மாநிலத்தில் 2008ல் மிதமான அளவு பெரும்பான்மையைப் பெற்றார் ( அவர்தான் 1964லிலிருந்து இங்கு வெல்லும் முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்). இந்த மாநிலத்தின் இரண்டு செனட் உறுப்பினர்களுமே தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் குடியரசுக் கட்சியினர் 2009ம் ஆண்டின் இறுதியில் நடந்த ஆளுநர் தேர்தலில் வென்றனர் . வரும் அதிபர் தேர்தலிலும், கடும் போட்டியைத் தரமுடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மக்கள் தொகைப் பரவல்

 • 64.8%வெள்ளையர்
 • 19.0%கறுப்பர்
 • 7.9%ஸ்பானியர்
 • 8.2%மற்றவர்

பொருளாதாரம்

 • $60,539 சராசரி வருடாந்திர வருமானம்
 • 10.4% வறுமை விகிதம்
 • 5.9% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 8.0%
  2000த்தில் குடியரசுக் கட்சி வெற்றி
 • 8.2%
  2004 குடியரசுக் கட்சி வெற்றி
 • 6.3%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

விஸ்கான்சின், 10 வாக்குகள்

பேட்ஜர்' என்ற வளையில் வாழும் ஒரு வகை விலங்குதான் இந்த மாநிலத்தின் கொடி, இலச்சினை மற்று அதன் அதிகாரபூர்வ மாநில கீதமான, 'ஆன் ,விஸ்கான்சின்' போன்றவைகளில் குறிப்பிடப்படுகிறது. விஸ்கான்சினுக்கு 'பேட்ஜர் மாநிலம்' என்றே ஒரு பட்டப்பெயரும் உண்டு.

1988லிருந்து நடந்த ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும், ஜனநாயகக் கட்சியினரே இங்கு வென்றுள்ளனர். ஆனால் 2000, மற்றும் 2004ம் ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தல்களில், குடியரசுக் கட்சியினர் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றனர். மேலும், குடியரசுக் கட்சியினர், 2010ல் நடந்த ஆளுநர் தேர்தல் மற்றும் ஒரு செனட் இடத்துக்கான தேர்தல் ஆகியவைகளை வென்றதை அடுத்து இந்த மாநிலம் கடும் போட்டி நடக்கும் மாநிலமாகிவிட்டது.

பராக் ஒபாமா, தான் 2008 தேர்தலில் இந்த மாநிலத்தில் பெற்ற கணிசமான பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றே நம்புவார். இவருக்கு இந்த மாநிலத்தில் இருக்கும் பலமான தொழிற்சங்க இயக்கமும் கைகொடுக்கும். இந்த மாநில ஆளுநர் ஸ்காட் வாக்கர் தொழிலாளர்களின் சர்ச்சைக்குரிய கூட்டாகப் பேரம் பேசும் உரிமைகளை குறைக்க எடுத்த சர்ச்சைக்குரிய முயற்சிகளுக்கு எழுந்துள்ள எதிர்ப்புக்கு தொழிற்சங்கங்கள் தலைமை தாங்குகின்றன. இந்தப் பிரேரணைகள் மக்கள் எதிர்ப்புக்கும் வாக்கரைத் திரும்பப் பெற ஒரு தேர்தல் நடத்தப்பட எடுக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான முயற்சிக்கும் வழிவகுத்தன.

மக்கள் தொகைப் பரவல்

 • 83.3%வெள்ளையர்
 • 6.2%கறுப்பர்
 • 5.9%ஸ்பானியர்
 • 4.6%மற்றவர்

பொருளாதாரம்

 • $51,257 சராசரி வருடாந்திர வருமானம்
 • 11,5% வறுமை விகிதம்
 • 7.5% வேலையற்றோர்

கடந்த தேர்தல் முடிவு,எவ்வளவு நெருக்கம்?

 • 0.2%
  2000 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 0.4%
  2004 ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
 • 13.9%
  2008 ஜனநாயகக் கட்சி வெற்றி

*நாடாளுமன்ற தொகுதிகளில் மற்றும் மாநில அளவில் வெல்பவர்களின் அடிப்படையில் வாக்குகளை பிரித்தளிக்கும் நெப்ராஸ்கா மற்றும் மெயின் ஆகிய மாநிலங்களைத் தவிர.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.