மலேசியா: அரசு பணத்தில் அரசியல்வாதி மகனுக்கு திருமணமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 அக்டோபர், 2012 - 14:33 ஜிஎம்டி
மலாக்கா மாநிலத்தைக் காட்டும் வரைபடம்

மலாக்கா மாநிலத்தைக் காட்டும் வரைபடம்

மலேசியாவில் முன்னணி அரசியல்வாதி ஒருவருடைய மகனுக்கு பெருவாரியான பொருட்செலவில் செய்யப்பட்ட திருமண வைபவத்தை அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு ஆணையத்தினர் விசாரித்துவருகின்றனர்.

மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சரான அலி ரஸ்தம்மின் மகனுக்கு நடந்த இத்திருமண வைபவம் எட்டு மணி நேரங்கள் நீடித்தன என்றும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இதில் கலந்துகொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

இத்திருமணச் செலவுகளுக்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதா என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இத்திருமணத்தில் செய்யப்பட்டிருந்த படாடோபங்களை சமூக வலைத்தளங்களில் மலேசியர்கள் பலர் கண்டித்துள்ளனர்.

இத்திருமண வைபவத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் குடும்பத்தினர்தான் செய்தனர் என்றும், திருமண விருந்துக்கு ஆன செலவு மற்றவர்கள் தெரிவிக்கும் அளவுகளை விட மிகவும் குறைவு என்றும் அலி ரஸ்தம் கூறுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.