ப்ரார் தாக்குதல் சம்பவம்; இருவர் மீது வழக்கு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 11:45 ஜிஎம்டி
லெப் ஜெனரல் ப்ரார்

ப்ரார் தாக்குதல் சம்பவம்;இருவர் மீது வழக்கு

லண்டனில் கடந்த வாரம் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ரார் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் தொடர்பாக இரண்டு சீக்கியர்கள் மீது பிரிட்டிஷ் போலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
சீக்கிய மதத்தின் மிகப்புனிதமான கோவிலாகக் கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோவிலின் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ப்ரார், கடந்த வாரம் மத்திய லண்டனில் நான்கு பேரால் தாக்கப்பட்டார்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தன்னைப் படுகொலை செய்ய நடத்தப்பட்ட ஒரு முயற்சி என்று கூறியிருக்கும் ப்ரார், இந்தத் தாக்குதல் 1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ராணுவத்தாக்குதலுக்கு பழிவாங்கும் முயற்சியாக எடுக்கப்பட்டது என்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.