வெனிசூவேலாவில் 4-வது தடவையும் அதிபரானார் சாவேஸ்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 10:31 ஜிஎம்டி
58 வயதான ஹூகோ சாவேஸ் லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக எழுகின்ற பலத்த குரல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறார்

58 வயதான ஹூகோ சாவேஸ் லத்தீன் அமெரிக்காவிலிருந்து எழுகின்ற அமெரிக்க எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறார்

வெனிசூவேலாவின் இடதுசாரித் தலைவர் ஹூகோ சாவேஸ் நான்காவது தடவையாகவும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரிலேஸை விட 10 வீதம் அதிகமாக, 54 வீதமான வாக்குகளை சாவேஸ் பெற்றுள்ளார்.

வெனிசுவேலா அதன் ஜனநாயக சோசலிஸ பாதையில் தொடர்ந்தும் வீறுகொண்டு பயணிக்கும் என்று ஹூகோ சாவேஸ், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் தலைவர்களில் அதிபர் சாவேஸ் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

இம்முறைத் தேர்தலில் தோல்வியடைந்தெள்ள எதிரணியினர், நாட்டில் அரைவாசிப்பேர் அதிபர் சாவேஸின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதை அவர் உணரவேண்டுமென்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாவேஸ் அண்மையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தார். அவர் இப்போது பூரணமாக குணமடைந்துவிட்டதாகக் கூறுகிறார்.

எண்ணெய்வளம் மற்றும் இயற்கை வாயு என உலகின் பெரும்பங்கு இயற்கை வளப் படிமங்களை கொண்ட நாடு வெனிசூவேலா என்பது குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.