பட்டினியை சமாளிப்பதில் இந்தியச் செயல்பாடு 'ஏமாற்றமளிக்கிறது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 அக்டோபர், 2012 - 10:33 ஜிஎம்டி
இந்தியாவில் பட்டினி

உண்டி கொடுத்தோர் ..... இந்தியாவின் செயல்பாடு 'ஏமாற்றமளிக்கிறது'

கடந்த பத்தாண்டுகளில் பசி பட்டினியை எதிர்த்துப் போராடுவதில் தெற்காசிய நாடுகளை விட, ஆப்ரிக்க நாடுகள் கூடுதல் வெற்றி கண்டிருக்கின்றன என்று உலகில் பசி பட்டினி குறித்த அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலக பட்டினி சுட்டெண் என்ற இந்த அறிக்கை பலமான பொருளாதார வளர்ச்சி, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையை மற்றும் போஷாக்கின்மையை குறைக்கவும் உதவியிருந்தாலும், எரித்திரியா மற்றும் புருண்டி போன்ற நாடுகளில் இன்னும் கவலையளிக்கும் அளவுக்கு பட்டினி நிலவுவதாகக் கூறுகிறது.
பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும், பட்டினியை சமாளிப்பதில் இந்தியாவின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வருமானம் சமமின்றி இருப்பது, மற்றும் பெண்கள் இன்னும் கீழ் நிலையில் இருப்பதை இதற்குக் காரணமாக அது கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.