போட்ஸ்வானா: பூர்வீக வீட்டை பெண் வாரிசு சுவீகரிக்க இருந்துவந்த தடை நீக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 10:40 ஜிஎம்டி
ஆப்பிரிக்கப் பெண்கள்

ஆப்பிரிக்க மரபில் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது.

பெண்கள் குடும்ப வீட்டுக்கு உரிமை கோர முடியாது என்று மரபுச் சட்டங்களில் இருந்துவரும் தடையை நீக்குவதாக போட்ஸ்வானாவின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆண்களும் பெண்களும் சமம் என்று உத்திரவாதம் வழங்கும் நாட்டின் அரசியல் சாசனத்துக்கு இந்த மரபுசார் விதிமுறை முரணாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பூர்வீக வீடு தனக்கே சொந்தம் என்று சகோதரன் மகன் ஒருவன் கூறியதை எதிர்த்து மூன்று சகோதரிகள் நீதிமன்றத்தில் செய்த முறைப்பாட்டில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்பிரிக்க சமூகங்களைப் பொறுத்தவரை குடும்ப சொத்துக்கு பெண்களுக்கு உரிமை இல்லை என்ற நிலை மரபுகளில் காணப்படுகிறது என்றும், ஆனால் பல நாடுகள் சட்டங்களை இயற்றி இந்த மரபு விதியை ஒழித்துவிட்டனர் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.