"சிரியாவில் கொத்தணி குண்டுகள் பயன்பாடு அதிகரிப்பு"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 அக்டோபர், 2012 - 10:34 ஜிஎம்டி
கொத்தணி குண்டு

கொத்தணி குண்டு ஒன்று

சிரியா தனது நாட்டு பொதுமக்களுக்கு எதிராகவே கொத்தணி குண்டுகளை பயன்படுத்திவருவதென்பது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது வரையான இடங்களில் கொத்தணி குண்டுகள் வீசப்பட்டிருந்தன என்று காட்டும் இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களை தாங்கள் கண்காணித்ததாகவும், கடந்த பதினெட்டு மாதங்களில் இந்த குண்டுகள் மூன்று தடவைகளில் பயன்படுத்திருந்ததோடு தாங்கள் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் அவ்வமைப்பு கூறுகிறது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட வெடிப்பொருட்களை சிரியாவின் அரச படைகள் பயன்படுத்துவதாக இந்த வீடியோக்கள் குறிப்புணர்த்துவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

கொத்தணி குண்டுகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ தடை விதிக்கின்ற சர்வதேச ஒப்பந்தத்தில் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் கையொப்பமிட்டுள்ளன என்றாலும் சிரியா அந்த ஒப்பந்தத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தணி குண்டுகள் என்பவற்றில் ஒரு குண்டின் உள்ளே நாற்பது சிறு குண்டுகள் இருக்கும், இவற்றில் சில வீசப்பட்ட நேரத்தில் வெடிக்காமல் அப்படியே கிடந்துவிடும்.

சில வேளைகளில் வருஷங்கள் கடந்த பின்னாலும்கூட திடீரென செயலூக்கம் அடைந்து உயிரிழப்புகளையோ அங்கஹீனங்களையோ இந்த குண்டுகள் ஏற்படுத்திவிடும்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.