சான்டி சூறாவளி கியூபாவைத் தாக்கியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 அக்டோபர், 2012 - 12:12 ஜிஎம்டி
கியூபாவில் 55 ஆயிரம் குடும்பங்கள் கரையோரங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.

கியூபாவில் 55 ஆயிரம் குடும்பங்கள் கரையோரங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.

சான்டி சூறாவளி மணிக்கு 183 கிலோமீட்டர்கள் வேகத்தில் தென்கிழக்கு கியூபாவைத் தாக்கத்தொடங்கியுள்ளது.

மிகவும் பலம்வாய்ந்த வகை- இரண்டு ரக சூறாவளியாக இது தீவிரமடைந்துள்ளது.

கியூபாவின் இரண்டாவது பெரிய நகரமான சாண்டியாகோ டி கியூபா நகரின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுள்ளதுடன் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மணித்தியாலங்களில் கியூாபாவைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கபடும் இந்த சூறாவளி பாஹாமாஸை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கியூபாவில் இந்த சூறாவளி பாதிப்புகளிலிருந்து தப்புவதற்காக கிட்டத்தட்ட 55 ஆயிரம் பேர் வரையில் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

முன்னதாக இந்த சூறாவளி ஜமேய்க்காவை தாக்கியிருந்தது.

அங்கு ஒருவர் பலியாகியுள்ளார். அங்கும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.