செர்பியர் படுகொலை : குரொயேஷிய ஜெனரல் விடுதலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2012 - 15:39 ஜிஎம்டி

முன்னாள் யூகோஸ்லாவியாவில் 1990களில் இடம்பெற்ற மோதல்களில் போர்க்குற்றம் புரிந்ததான குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் குரொயேஷிய ஜெனரலான அண்டே கொடோவினா அவர்களை தி ஹேக்கில் இருக்கின்ற ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த விசாரணை மன்றத்தின் முன்பாக ஆஜரான முதலாவது குரொயேஷிய உயர் அதிகாரியான கொடாவினா மீது கடந்த ஆண்டில், நூற்றுக்கணக்கான செர்பியர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவருக்கு விதிக்கப்பட்ட 24 வருட சிறைத்தண்டனை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, நீதிமன்றத்தில் பெரும் ஆரவாரம் காணப்பட்டது.

அவர் மீது தண்டனை விதிப்பதற்கான ஆதாரங்கள் போதாது என்று சட்டத்தரணிகள் கண்டறிந்தனர்.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை வேண்டுமென்றே தாக்கவில்லை என்று கொடாவினா தனது விசாரணையின் போது கூறியிருந்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.