பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோரியது பர்மிய அரசு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 டிசம்பர், 2012 - 12:03 ஜிஎம்டி
தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு பொலிசார் தாக்கியுள்ளதாக தகவல்

தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு பொலிசார் தாக்கியுள்ளதாக தகவல்

பர்மாவில் 9 தினங்களுக்கு முன்னர் தாமிர (செப்பு) சுரங்கமொன்றுக்கு வெளியே நடந்த போலிசாரின் அதிரடி படைநடவடிக்கையின்போது பெளத்த பிக்குகள் காயப்பட்டமைக்கு அந்நாட்டு அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.

உள்ளூர் விவசாயிகள் தமது நிலபுலங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

இதன்போது 20 பௌத்த பிக்குகள் அடங்கலாக 50 பொதுமக்கள் காயமடைந்தனர்.

தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களைக் கொண்டு போலிசார் தாக்குதல் நடத்தியதால் பலருக்கு மிக மோசமான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு புதிய சிவில் அரசாங்கம் பதவியேற்றதை தொடர்ந்து, அங்கு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் பர்மாவில் நடந்துள்ள மிகமோசமான அரச நடவடிக்கையாக இதுபார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குகின்ற பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட விவகாரத்தால் அரசாங்கம் கடுமையான கலக்கம் அடைந்துள்ளதாக பிபிசியின் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜோனதன் ஹெட் தெரிவித்தார்.

அதனாலேயே அரசாங்கம் பிக்குகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பர்மாவில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்தி பௌத்த பிக்குகளே அரசாங்க அதிகாரிகளுடன் அடிக்கடி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.