ஃபிலிப்பைன்ஸில் புதிய மனித உரிமைகள் சட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 14:43 ஜிஎம்டி
முன்னாள் ஆட்சியாளர் ஃபெர்டிணாண்ட் மார்க்கோஸ்

முன்னாள் ஆட்சியாளர் ஃபெர்டிணாண்ட் மார்க்கோஸ்

ஃபிலிப்பைன்ஸில் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டவர்கள் காணாமல் போய்வந்த சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலான புதிய மனித உரிமைகள் சட்டம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

மக்களைத் துன்புறுத்தியதாகவோ அல்லது பலவந்தமாக கொண்டுசென்றதாகவோ குற்றம் நிரூபிக்கப்படும் அரசு அதிகாரிகளுக்கு இனி ஆயுட் தண்டனை வழங்கப்படும் என்பதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

நாட்டில் ரகசிய தடுப்புக்காவல் மையங்கள் பயன்படுத்தப்படுவதற்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.

பிலிப்பைன்ஸில் 1970களிலும் 80களிலும் ஃபெர்டிணண்ட் மார்கோஸ் ஆட்சி செய்தபோது ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

இவர்களின் பலர் ரகசிய தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசியாவில் முதல் தடவையாக இப்படி ஒரு சட்டம் வருகிறது எனக்கூறி மனித உரிமைக் குழுக்கள் பாராட்டியுள்ளன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.