ஆப்கானிஸ்தான்: பெண் செய்த தாக்குதலில் அமெரிக்கர் சுட்டுக் கொலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 டிசம்பர், 2012 - 14:26 ஜிஎம்டி
பெண் ஒருவர் இப்படியான தாக்குதலை நடத்துவது இதுவே முதல் முறை

பெண் ஒருவர் இப்படியான தாக்குதலை நடத்துவது இதுவே முதல் முறை

ஆப்கானிஸ்தானின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஆப்கானில் பணியாற்றிவந்த அமெரிக்க ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

காபுலில் உள்ள பாதுகாப்பு அதிகம் கொண்ட பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அமெரிக்க ஆலோசனை அதிகாரியை நர்கிஸ் என்ற பெண் பொலிஸ்காரர் சுட்டுக்கொன்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நர்கிஸை பிடித்து விசாரித்துவருவதாகவும் புலனாய்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரால் ஆப்கானிலுள்ள வெளிநாட்டவர் ஒருவர் இவ்வகையாகக் கொல்லப்படுவது இதுவே முதல் முறை.

ஆனால் இந்த வருடத்தில் மட்டுமே ஆப்கானிய சிப்பாய்களாலோ அல்லது பொலிஸ்காரர்களாலோ அந்நாட்டிலுள்ள வெளிநாட்டுப் படையினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாட்டின் வடக்கிலுள்ள ஜௌஸ்ஜான் பகுதியில் பொலிஸ்காரர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்துவந்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டை நடத்தி பொலிஸ்காரர்கள் ஆறு பேரைக் கொன்றுள்ளார்.

இறந்த பொலிஸ்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டுபோய் தாலிபான்களிடம் இவர் கொடுத்துள்ளார் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.