உலகின் நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 12:29 ஜிஎம்டி

சீனாவில் அதிவேக விரைவு ரயில்கள் அதிகரித்து வருகின்றன

உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பீஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவேக பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து இன்று-புதன்கிழமையன்று(26.12.12) புறப்பட்டது.

இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் முன்னர் இருபது மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது.

பயணிகளை வரவேற்க தயாராக இருக்கும் சீன ரயில்வே பணியாளர்

இப்போது அந்த தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடக்க முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் நீண்ட அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளில் இந்தத் திட்டம் சிக்கியுள்ளது.

சீனாவில் இவ்வகையான அதிவேக ரயில் பாதைகள் துரிதமாக வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.