பிலாவல் புட்டோ தலைமை வெற்றி பெறுமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 டிசம்பர், 2012 - 17:33 ஜிஎம்டி

பிலாவல் புட்டோ

பெனசீர் புட்டோவின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோ வியாழக்கிழமை மக்களிடையே தோன்றி உரையாற்றினாலும் அவர் அரசியலுக்கு வருவார் என்று நேரடி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

எனினும் அவரது தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஆசிஃப் அலி ஜர்தாரி அவர்கள் இப்போது முதல் அவர் மக்களுடன் தங்கியிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பிலாவல் புட்டோ தேவை என்று ஊகங்கள் எழுந்துள்ள நிலயில், ஜர்தாரியின் இந்த அறிவிப்பு கூட சாதாரண ஒரு அறிவிப்பு போலத்தான் உள்ளது என்று பிபிசியின் உருது சேவையின் தலைவரும் மேற்கு ஆசியப் பகுதி ஒலிபரப்பின் ஆசிரியருமான ஆமீர் அகமது கான் கூறுகிறார்.

கவர்ச்சி அரசியல்

"பாகிஸ்தான் மக்கள் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தி"

பாகிஸ்தானிய மக்கள் கவர்ச்சி அரசியலிருந்து விலகி வந்து வெகு காலமாகிவிட்டது என்றும் வாரிசு அரசியலை மட்டுமே நம்பியிராத பல அரசியல்வாதிகள் இப்போது உருவாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவும் சூழலில், பிலாவல் புட்டோவால் எந்த அளவுக்கு அதை சமாளித்து திறமையுடன் செயல்பட முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இப்போது பாகிஸ்தானில் மக்கள் ஒரு நல்லாட்சியையே எதிர்பாக்கிறார்கள் என்றும், அதையொட்டியே இன்னும் மூன்று நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முடிவுகள் கவர்ச்சி அரசியலைக் கடந்து அமையக் கூடும் எனவும் ஆமிர் அகமது கான் தெரிவிக்கிறார்.

பெனசீர் புட்டோவின் ஐந்தாவது ஆண்டு நினவு தினத்தின் போதே 24 வயதான பிலாவல் புட்டோ கட்சித் தொண்டர்களிடையே இன்று உரையாற்றினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.