ஹிலாரிக்கு இரத்தக் கட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 11:13 ஜிஎம்டி


இரத்தக் கட்டி காரணமாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தக் கட்டியை தடுக்கும் மருந்தை அவருக்கு வழங்கியுள்ள மருத்துவர்கள், குறைந்தபட்சம் செவ்வாய்க்கிழமை வரை சோதனைக்காக அவரை மருத்துவமனையில் தங்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மாத முற்பகுதியில் மயக்கமடைந்ததை அடுத்து தொடர் பரிசோதனைக்காக திருமதி கிளிண்டன் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, இந்த இரத்தக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

வயிற்றில் ஏற்பட்ட வைரஸ் தொற்று காரணமாக நீர்ச்சத்து குறைந்த நிலையில் அவர் மயக்கமடைந்திருந்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.