வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஜனவரி, 2013 - 13:17 ஜிஎம்டி

பல நாடுகளில் இருக்கும் ஜெர்மனுக்கு சொந்தமான தங்கக்கட்டிகள்

வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெர்மன் நாட்டுத் தங்கக்கட்டிகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் ஜெர்மனிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென அதன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவை அக்காலப் பகுதியில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்க அனுப்பப்பட்டன.

சோவியத் யூனியனின் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு அப்போது செய்யப்பட்டது.

இந்தத் தங்கம் பனிப் போர் காலத்தில் பல நாடுகளில் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு மட்டும் 120 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்தவை.

இவ்வகையில் 700 டன்கள் தங்கத்தை நியூயார்க் மற்றும் பாரிஸிலிருந்து மீண்டும் நாட்டுக் கொண்டுவர ஜெர்மனியின் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுமே யூரோ நாணயத்தை பயன்படுத்துவதால் பிரான்ஸின் வங்கிப் பெட்டகங்களில் இருக்கும் அனைத்து தங்கத்தையும் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

எனினும் இங்கிலாந்து வங்கிகளில் இருக்கும் சேமிப்பில் இப்போதைக்கு கைவைக்கும் எண்ணம் இல்லை எனவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ஆனால் அரசின் தணிக்கையாளர்களோ எந்த நாடுகளில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்றும், அவை அனைத்தும் உண்மையான தங்கக்கட்டிகளா என்றும் அரசுக்கே தெரியாத சூழல் உள்ளது என்று கூறி அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.