பிரிட்டிஷ் இராணுவத்தில் ஆட்குறைப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2013 - 12:30 ஜிஎம்டி
பிரிட்டிஷ் இராணுவம்

பிரிட்டிஷ் இராணுவம்

பிரிட்டிஷ் இராணுவம் ஆட்குறைப்பு செய்யவுள்ளது. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5300 படையினர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வெட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. இதற்கு முன்பு இரு தடவைகளில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.

இராணுவத்தின் எண்ணிக்கையை 2010 ஆம் ஆண்டில் 102.000 இருந்தது. இதை 82 ஆயிரமாக 2017 ஆம் ஆண்டுக்கள் குறைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

விமானப்படை, கடற்படை, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளை பாதிக்கும் வெட்டுகள் விரைவில் வரும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வெட்டுகள் காரணமாக, பிரிட்டிஷ் இராணுவத்தின் திறன் பாதிக்கப்படும் என்று கவலைகள் எழுந்துள்ளன. இராணுவ பட்ஜெட் 33 பில்லியன் பவுண்டுகள் என்று ஒரே நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் டேவிட் கேமரன், நாட்டுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய சவால்களை சமாளிக்க தற்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.