எகிப்தில் கலவரம்: 26 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஜனவரி, 2013 - 15:40 ஜிஎம்டி
தீர்ப்புக்குப் பின்னரும் கலவரங்கள் நடந்துள்ளன.

தீர்ப்புக்குப் பின்னரும் கலவரங்கள் நடந்துள்ளன.

எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.

ஆனால் தண்டனைக்குள்ளான நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறையின் அருகே ஆட்களின் குடும்பத்தார் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் பொலில் அதிகாரிகள் ஆவர்.

300க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் காயமும் அடைந்துள்ளனர்.

சென்ற வருடம் போர்ட் செய்யது நகரத்து கால்பந்தாட்ட கழகத்துக்கும் கெய்ரோவைச் சேர்ந்த ஒரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடந்த பின்னர் வன்முறை வெடித்த்ருந்தது.

அந்த வன்முறையை அடக்க பொலிசார் பெரிதாக முயலவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.