ஸ்டாலின்கிராட் சண்டை : 70 ஆண்டுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 பிப்ரவரி, 2013 - 11:43 ஜிஎம்டி


இரண்டாம் உலகப் போரில் பெரும் திருப்பு முனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் சண்டை முடிவுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.

இதற்கான நினைவு தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தலைமையில் அனுட்டிக்கப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்தச் சண்டையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

ஸ்டாலின் இறந்த பிறகு இந்த நகருக்கு ''வொல்கோகிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் கவுன்ஸில் மீண்டும் இதனை ஸ்டாலின்கிராட் என்று இந்தப் போரின் நினைவு தினங்களின் போது அழைப்பதற்கான அனுமதியை அங்கீகரித்தது.

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்னாள் இராணுவ தளபதிகள் மாத்திரமல்லாமல், சில ஜேர்மனிய இராணுவ மூத்த அதிகாரிகளும் இந்த நினைவு தினத்துக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.