பாலியல் குற்றவாளி யார்?: இரட்டைச் சகோதரர்களால் போலிசாருக்கு குழப்பம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 பிப்ரவரி, 2013 - 16:50 ஜிஎம்டி
பாலியல் குற்ற சூத்திரதாரியின் டிஎன்ஏ தகவல்கள் இரட்டைச் சகோதரர்கள் இருவரினது தகவல்களுடனும் பெரும்பாலும் பொருந்திப்போகின்றன

பாலியல் குற்றச் சூத்திரதாரியின் டிஎன்ஏ தகவல்கள் இரட்டைச் சகோதரர்கள் இருவரினது தகவல்களுடனும் பெரும்பாலும் பொருந்திப்போகின்றன

பிரான்ஸில் மர்ஸை நகரில் நடந்துள்ள தொடர்- பாலியல் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்ற போலிசார், ஒரே மாதிரியான இரட்டைச் சகோதரர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

ஆனால் யார் மீது குற்றச்சாட்டைப் பதிவது என்பது தொடர்பில் போலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலியல் குற்றத்தைப் புரிந்துள்ள சூத்திரதாரியின் டிஎன்ஏ மாதிரிப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து போலிசாருக்குக் கிடைத்துள்ளன.

ஆனால் அந்த டிஎன்ஏ -மாதிரித் தகவல்கள் இரட்டைச் சகோதரர்கள் இருவரினது டிஎன்ஏ தகவல்களுடனும் பொருந்திப் போகின்றன.

இரட்டைச் சகோதரர்கள் இருவரினதும் டிஎன்ஏ தகவல்கள் இரண்டும் மிகச் சொற்பமான அளவிலயே ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகின்றன.

மிகவும் நூதனமான சோதனை மூலம் மட்டுமே இரண்டுபேரின் டிஎன்ஏ தகவல்ளையும் வேறுபடுத்தி பிரித்து ஆராயமுடியும்.

வழமையில் பயன்படும் 400 தகவல்களை ஒப்பிட்டு சோதனை முறைக்குப் பதிலாக பில்லியன் கணக்கான தகவல்களை ஒப்பிடுகின்ற மிகக் கடினமான, நூதனமான சோதனையின் மூலமே அது சாத்தியம் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.