பொது வாழ்வில் இருந்தே விலகுவதாக போப்பாண்டவர் குறிப்புணர்த்தியுள்ளார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 பிப்ரவரி, 2013 - 15:27 ஜிஎம்டி

போப்பாண்டவர் பெனடிக்ட் இந்த மாத இறுதியில் தான் ஓய்வு பெற்ற பிறகு, பொது வாழ்விலிருந்தே ஒதுங்கிவிடப்போவதாக குறிப்புணர்த்தியிருக்கிறார்.

ரோம் நகரத்திலிருந்து வந்த மறை மாவட்டக் குருமார்கள் குழு ஒன்றிடம் பேசுகையில், அவர்களிடம் மிகவும் நெருக்கமாக தொடர்ந்து இருக்கப்போவதாகவும், ஆனால் உலகின் பார்வையிலிருந்து மறைந்திருக்கப்போவதாகவும் கூறினார்.

இதன் மூலம், தனக்கு அடுத்தபடியாக வரும் போப்பாண்டவரின் கீழ் இயங்கப்போகும் திருச்சபையின் விவகாரங்கள் குறித்து அவர் கருத்தேதும் தெரிவிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதையே இந்தக் கருத்து காட்டுவதாக பிபிசியின் ரோம் நகர நிருபர் கூறுகிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.