கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 12:39 ஜிஎம்டி
தன் மீது கொலைக் குற்றச்ச்சாட்டு முன்வைக்கப்படும் என்பதைக் கேட்டு அழுத பிஸ்டோரியஸ்

தன் மீது கொலைக் குற்றச்ச்சாட்டு முன்வைக்கப்படும் என்பதைக் கேட்டு அழுத பிஸ்டோரியஸ்

தென்னாப்பிரிக்காவின் பாராலிம்பிக் சாம்பியனான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கூட்டம் நிரம்பிவழிந்த பிரெடோரியா நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள தனது காதலி ரீவா ஸ்டீன்கம்பை தான் திட்டமிட்டுக் கொன்றதாக அரசு தரப்பில் வாதிடப்படும் என்று சட்ட நடவடிக்கை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தபோது பிஸ்டோரியஸ் மனமுடைந்து கண்ணீர் சிந்தினார்.

ஸ்டீன்கம்ப் சுடப்பட்டது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து என்று பிஸ்டோரியஸ் தரப்பில் வாதிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஸ்டோரியஸ் பிணையில் வெளிவரக் கோரிய மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை வரையில் ஒத்திப்போடப்பட்டது.

நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிஸ்டோரியஸ் காவல் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்தான் இரண்டு கால்களும் அகற்றப்பட்டவராக ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற முதல் வீரர் ஆவார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இவர், அதன் பின்னர் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களும் வென்றிருந்தார்.

கார்பன் இழைகளால் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கால்களுடன் இவர் ஓடுவதால் இவருக்கு பிளேட் ரன்னர் என்ற பெயர் வந்தது.

பிஸ்டோரியஸும், இறந்த ரீவா ஸ்டீன்கம்ப்பும் கடந்த நவம்பர் மாதம் முதல் பழகிவந்தனர்.

தென்னாப்பிரிக்காவின் மிகப் பிரபலமான ஜோடியாக இந்த ஜோடி பார்க்கப்பட்டது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.