ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 பிப்ரவரி, 2013 - 15:41 ஜிஎம்டி
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹீமுடன் ஆஸ்திரேலிய சுயாதீன செனட்டர் நிக் செனோபோன்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹீமுடன் ஆஸ்திரேலிய சுயாதீன செனட்டர் நிக் செனோபோன் - (கோப்பு படம்)

மலேசியாவுக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஒருவரை தடுத்துவைத்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவரை திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

மலேசியாவில் நடக்கவுள்ள தேர்தல்களின் நீதி நியாயத் தன்மைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்குசென்றுள்ள நாடாளுமன்ற உண்மையறியும் குழுவிலேயே தான் இடம்பெற்றிருந்ததாக ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனோபோன் பிபிசியிடம் தெரிவித்தார்.

மலேசியாவில் தேர்தல் மோசடிகளும் ஊழல்களும் நடக்க வாய்ப்பிருப்பது பற்றி கடந்த காலங்களில் அவர் பேசியிருக்கிறார்.

விமானநிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டுள்ள அவர் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து ஆஸ்திரேலிய குழுவினர் தமது பயணத்தை ரத்துசெய்துள்ளனர்.

மலேசியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் அதுபற்றி விளக்கமளிக்க வேண்டுமென்று அந்நாட்டைக் கோரியுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.