'சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன இராணுவப் பிரிவு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 பிப்ரவரி, 2013 - 10:43 ஜிஎம்டி

கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள மண்டியண்ட் என்னும் அந்த நிறுவனம், இவற்றுக்கு அதிகபட்ச காரணமாக 61398 எனும் இராணுவப் பிரிவு இருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அந்தப் பிரிவு பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள பரந்துபட்ட தொழில்துறையில், நூற்றுக்கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை திருடியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று இதனை சீன வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.