'பிறந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் மறுப்பு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 பிப்ரவரி, 2013 - 14:08 ஜிஎம்டி
இந்தோனீசிய குழந்தை ஒன்று ( ஆவணப்படம்)

இந்தோனீசிய குழந்தை ஒன்று ( ஆவணப்படம்)

இந்தோனீசியாவில் குறைந்தபட்சம் 8 மருத்துவமனைகளால் சிகிச்சை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிறந்து 5 நாளேயான குழந்தை ஒன்று இறந்துபோனமை குறித்து சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்க புலனாய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

தனது குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதற்கு சிகிச்சை வழங்க மறுத்ததாக அந்த குழந்தையின் தந்தை கூறியதாக வெளியான செய்திகளை அடுத்து அங்கு ஒரு பொதுமக்கள் மத்தியில் ஆத்திரம் உருவெடுத்திருக்கின்றது.

அரசாங்க மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க மறுத்ததாக வந்த தகவல்களை அரசாங்க அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.

ஆனால், தலைநகர் ஜகார்த்தாவில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் போதாது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.